தமிழில் ஹைக்கூ (துளிப்பா) கவிதை பற்றிய ஒரு மதிப்பீடு… சின்னத்தம்பி குருபரன்

ஹைக்கூ (Haiku) என்பது உலகிலேயே மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு, மிக ஆழமான சிந்தனையைத் தூண்டும் ஒரு உன்னதமான கவிதை வடிவம். தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிதைக்கு அடுத்தபடியாகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்த ஹைக்கூ வடிவம்தான். இது சொற்ப அளவு சொற்களால், ஆழமான கருத்தையும் ஒரு காட்சியின் அதிர்வையும் வெளிப்படுத்தும் கவிதை வடிவமாகும். இது இயற்கையின் ஒரு கணநேரக் காட்சியை அல்லது உணர்வை வாசகரின் மனத்தில் அப்படியே பிரதிபலிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.
1. ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்.
மோரிடேகே (Moritake – 1473–1549), சோகன் (Sokan – 1465–1553) போன்றோரால் ஆரம்பக்கட்ட முயற்சிகள் செய்யப்பட்டாலும், இக்கவிதை வடிவத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றவர் மட்சுவோ பாஸோ (Matsuo Basho – 1644–1694) ஆவார். இவரே ஹைக்கூவின் ஆன்மாவாகக் கருதப்படுகிறார். இவரைத் தொடர்ந்து யோசா பூசன் (Yosa Buson), இசுசா (Issa) போன்றோரும் ஹைக்கூவை வளர்த்தெடுத்தனர்.
ஹைக்கூ கவிதை முதன் முதலில் ஜப்பானில் தோற்றம் பெற்றது. பொ.ஆ.பி 16 ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய ‘ரெங்கா’ (Renga) என்ற கூட்டுக் கவிதையின் தொடக்கப் பகுதியான ‘ஹொக்கு’ (Hokku) என்ற வடிவத்திலிருந்து இது உருவானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மசாவுக்கா ஷிகி (Masaoka Shiki) என்ற கவிஞர் இதற்கு ‘ஹைக்கூ’ என்று பெயரிட்டார்.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில் பொ.ஆ.பி 17 ஆம் நூற்றாண்டில் (1603 – 1663) பாரம்பரியக் கூட்டுக் கவிதை வடிவங்களிலிருந்து விடுபட்டு, ‘ஹொக்கூ’ (Hokku) என்ற பெயரில் தனித்தியங்கும் மூன்று வரிக் கவிதை வடிவம் உருவானது. இது சீன-ஜப்பானிய மொழிக் கலவையாகவும், ஜென் (Zen) பௌத்த தத்துவத்தின் தாக்கத்துடனும் தோன்றம் பெற்றது.
ஜப்பானிய ஹைக்கூவின் பிதாமகராகக் கருதப்படுபவர் மத்சுவோ பாஷோ (Matsuo Basho) ஆவார். இவருடைய “பழைய குளம்” கவிதைதான் உலகப் புகழ்பெற்ற முதல் ஹைக்கூ கவிதையாகும். இது இயற்கையின் அமைதியையும், கண நேர அசைவையும் ஒரு புள்ளியில் இணைத்த கவிதையாகும்.
பழைய குளம் தவளை குதிக்கும் சத்தம். தண்ணீரின் ஓசை.
மசகோ சிகி (Masaoka Shiki – 1867–1902) என்ற கவிஞர்தான் ‘ஹொக்கூ’ என்ற பெயரை மாற்றி ‘ஹைக்கூ’ (Haiku) என்ற புதிய பெயரை நிலை நாட்டினார். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் தோற்றத்துக்கு சங்ககால இலக்கியங்கள் சிலவும் திருக்குறள், நாலடியார் போன்றனவும் அதாரமாக அமைந்திருக்க வேண்டும் என மசகோ சிகி அறிதியிட்டுக் குறிப்பிட்டிருக்கின்றார். இக்காலத்தில இது ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் பரவத் தொடங்கியது. ஈழத்தில் மஹாகவி ருத்திரமூர்த்தி, முருகையன், தளயசிங்கம் போன்றோர் ‘துளிப்பா’ எனப் பெயரிட்டுக் கவிதைகளை எழுதினர்.
ஜப்பானிய மொழியில் மூன்று வரிகளில் அமைந்த ஹைக்கூவிற்கு 5 – 7 – 5 என்ற ‘ஓன்’ (On – ஒலியசைக் கணக்கு உள்ளது. ஒரு கவிதை ஜப்பானிய மொழிச் சொல்லில் மொத்தம் 17 ஒலியசைகளைக் (Syllables) கொண்டிருக்கும். தமிழ் மரபுக் கவிதைகளில் சீர் அல்லது சொற்கள் வருவதுபோல் 17 சீர்களைக் கொண்டிருக்கும். இது ஜப்பானியக் ஹைக்கூ கவிதையில் அடங்க வெண்டிய கட்டாய விதி முறையாகும்.
2. ஆங்கில இலக்கியத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிதை.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பிய, ஆங்கில இலக்கிய உலகிற்கு அறிமுகமாயின. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக ஜப்பானியக் கவிதைகள் மேற்கு நாடுகளுக்குள் நுழைந்தன. ஜப்பானிய இலக்கியங்கள் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது ஹைக்கூ கவிதைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பிரிட்டிஷ் தூதரான வில்லியம் ஜோர்ஜ் ஆஸ்டன் (William George Aston) போன்றவர்கள் ஜப்பானியக் கவிதைகளை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினர். கவிதையின் சுருக்கம், இயற்கையைப் பற்றிய நேரடியான சித்திரிப்பும் மேற்கத்தேசக் கவிஞர்களை கவர்ந்தது. ஆங்கில இலக்கியத்தில் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிப் போக்கிளைப் பின்வருமாறு சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.

1. இமேஜிசக் கவிஞர்களின் தாக்கம் (Imagist Movement – 1910களில்).
ஆங்கில நவீன கவிதைத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘இமேஜிசம்’ இயக்கத்தின் முன்னணிக் கவிஞரான எஸ்ரா பவுண்ட் (Ezra Pound) ஜப்பானியக் ஹைக்கூவினால் ஈர்க்கப்பட்டார். குறைந்த சொற்களில் பிம்பங்களை (Images) அடுக்கும் ஹைக்கூ நுட்பத்தைப் பின்பற்றி அவர் எழுதிய “In a Station of the Metro” என்ற புகழ்பெற்ற கவிதை ஆங்கில ஹைக்கூ மற்றும் நவீன கவிதைகளின் போக்கையே மாற்றியமைத்தது. இவரைத் தொடர்ந்து ரி.இ. ஹல்மி (T.E. Hulme) போன்ற கவிஞர்களும் ஆங்கிலத்தில் ஹைக்கூ பாணியிலான கவிதைகளை எழுதத் தொடங்கினர்.
2. பீட் தலைமுறைக் கவிஞர்களின் எழுச்சி (Beat Generation -1950 களில்)
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவில் தோன்றிய ‘பீட் ஜெனரேஷன்’ (Beat Generation) கவிஞர்களால் ஹைக்கூ அமெரிக்காவில் வெகுவாகப் பிரபலமானது. ஜாக் கெருவாக் (Jack Kerouac) போன்ற பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் ஹைக்கூ நூல்களை வெளியிட்டு, அதனை இளம் தலைமுறைக் கவிஞர்களிடம் கொண்டு சேர்த்தனர்.
3. ஆங்கிலக் ஹைக்கூவின் வடிவ மாற்றங்கள்.
ஜப்பானிய மொழியில் உள்ள 17 ஒலிக் கூறுகள் (Morae) ஆங்கிலத்தில் அப்படியே சாத்தியமில்லை என்பதால், ஆங்கிலக் கவிஞர்கள் பொதுவாக 5, 7, 5 என்ற அசைக் கட்டமைப்பைப் (Syllables) பயன்படுத்தினர். எனினும், காலப்போக்கில் ஆங்கிலக் கவிஞர்கள் இந்தக் கடுமையான அசை விதிகளிலிருந்து விலகி, உணர்வுகளுக்கும் காட்சிச் சுருக்கத்திற்கும் மட்டுமே முன்னுரிமை அளித்து (2.3.2 சீரில) நவீன ஹைக்கூக்களை எழுதத் தொடங்கினர்.
இன்று ஆங்கில இலக்கியத்தில் ஹைக்கூ என்பது வெறும் ஜப்பானிய வடிவம் மட்டுமல்லாமல், மேற்கத்திய சூழலுக்கேற்ப பரிணாமம் பெற்றுப் பரவலாக எழுதப்படும் ஒரு பிரதான கவிதை வடிவமாக நிலைபெற்றுள்ளது.
ஆங்கிலக் கவிஞர்கள் ஹைக்கூவின் ‘குறைந்த சொற்கள், விரிந்த பொருள்’ (Brimming brevity), இயற்கையை மையமாகக் கொண்ட தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டனர். ஆங்கில நவீன கவிதைக் காலகட்டத்தில் (Modernism), ‘இமேஜிசம்’ (Imagism) இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்கள் ஹைக்கூவை வெகுவாகப் பின்பற்றினர். எனினும், எஸ்ரா பவுண்ட் (Ezra Pound), ரிச்சர்ட் ஆல்டன், டி.இ. ஹியூம் போன்ற கவிஞர்கள் ஹைக்கூவில் உத்திகளைக் கையாண்டனர். குறிப்பாக, எஸ்ரா பவுண்டின் உலகப் புகழ்பெற்ற குறுகிய கவிதையான “In a Station of the Metro” ஹைக்கூவின் தாக்கத்தால் உருவான மிகச்சிறந்த ஆங்கிலக் கவிதையாகக் கருதப்படுகிறது.
எனினும், காலப்போக்கில் ஆங்கிலக் கவிஞர்கள் இந்தசக் கடுமையான ஒலி அசை விதிகளிலிருந்து (Syllable count) விலகி, சுதந்திரமான நடையில் கவிதைகளை ஆக்கத் தொடங்கினர்.
4. ஆங்கிலத்தில் ஹைக்கூவின் தற்போதைய நிலை.
1950 களில் ஜாக் கெருவாக் (Jack Kerouac) போன்ற பீட் தலைமுறை கவிஞர்கள் ஆங்கிலத்தில் ஹைக்கூ எழுதுவதை மக்களிடையே பிரபலப்படுத்தினர். அவர்கள் மரபுவழி வரம்புகளைத் தாண்டி நவீன உணர்வுகளுடன் ஆங்கிலக் ஹைக்கூக்களை எழுதினர். ஆங்கில இலக்கியத்தில் ஹைக்கூ (Haiku) கவிதைகள் கடந்த சில தசாப்தங்களாகப் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஜப்பானிய மரபிலிருந்து பெறப்பட்ட இக்கவிதை வடிவம், ஆங்கில மொழிச் சூழலில் தனக்கென ஒரு தனித்துவமான நவீன அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.
தொடக்கக் காலத்தில் ஆங்கிலத்தில் ஹைக்கூ என்றாலே 5, 7, 5 என்ற முறைப்படி 17 syllables (ஒசைகள்) இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது. ஆனால் தற்காலத்தில் இந்த வடிவம் மாற்றமடைந்துள்ளது. ஆங்கில மொழியின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜப்பானியக் கவிதைகளின் மூல வடிவமான ‘மோர்ரா’ (Morae) கணக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில், 17 ஓசைகளை விடக் குறைவான சொற்களுடன் சுருக்கமான வடிவங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தற்கால ஆங்கில ஹைக்கூ கவிதைகள் வெறும் வர்ணனைகளாக இல்லாமல், இரண்டு வெவ்வேறு காட்சிகளை அல்லது பிம்பங்களை அருகருகே வைத்து (Fragment and Phrase) வாசகரிடத்து ஒரு திடீர் புரிதலையும் ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டும் வகையில் எழுதப்படுகின்றன.
பாரம்பரிய ஜப்பானியக் ஹைக்கூவில் பருவ காலத்தைக் குறிக்கும் சொற்கள் (Season words / Kigo) கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப இயற்கையை மட்டுமல்லாமல், நகர்ப்புற வாழ்க்கை, சமகால மனிதர்களின் மனநிலைகள், தொழில்நுட்பம், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகள் போன்ற பல்வேறு பொருண்மைகளும் ஹைக்கூக்களில் கையாளப்படுகின்றன.
ஆங்கிலத்தில் ஹைக்கூவோடு தொடர்புடைய பிற வடிவங்களான ஹைபன் (Haibun – உரைநடையும் ஹைக்கூவும் கலந்தது) மற்றும் சென்ரியூ (Senryu – மனித இயல்புகளை நையாண்டியாகப் பேசும் குறுகிய கவிதைகள்) ஆகியவையும் தீவிரமாக எழுதப்பட்டு வருகின்றன.
ஆங்கிலத்தில் Modern Haiku, Frogpond, The Heron’s Nest போன்ற பிரத்தியேக பன்னாட்டு இலக்கிய இதழ்கள் ஹைக்கூ வளர்ச்சிக்காகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், பல அமைப்புகள், சமூக வலைத்தளங்கள் ஆங்கில ஹைக்கூவை உலகளவில் வளர்த்துப் பேணி வருகின்றன.
ஆங்கில இலக்கியத்தில் ஹைக்கூ என்பது வெறும் ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதை போலின்றி, ஆங்கில மொழியின் இலக்கணச் சூழலுக்கும் நவீன உலக வாழ்வியலுக்கும் ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு ஆழமான வீச்சோடு இயங்கி வரும் ஒரு வளமான கவிதை வடிவமாகத் திகழ்கிறது.
3. தமிழில் ஹைக்கூவின் வருகையும் வளர்ச்சியும்.
தமிழ் இலக்கியத்தில் ஜப்பானியக் ஹைக்கூ கவிதை முதன் முதல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் ஆரம்பமாகிறது. 1916 அக்டோபர் 16 இல் 1பாரதியார் தமிழில் ஹைக்கூ பற்றிய சிந்தனையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் ‘ஜப்பானியக் கவிதை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை மூலமாகவே ஜப்பானியக் கவிதைகள் தமிழர்களுக்கு அறிமுகமாயின. இதில் அவர் சில கவிதைகளை எழுதியதோடு சில ஜப்பானியக் கவிதைகளையும் மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளார். இதுவே தமிழில் ஹைக்கூ விதை விழுந்த நாளாகக் கருதப்படுகிறது.
மறுமலர்ச்சிக் காலத்தில் இதழியல் ரீதியாக எழுத்தாளர் சுஜாதா, 1966 ஜனவரியில் ‘கணையாழி’ இதழில் ஆங்கிலத்திலிருந்து சில ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழில் நவீன கவிதை வெளியில் ஹைக்கூ வடிவத்திற்கு முறையான விதையிட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார். இவர் தனது புகழ்பெற்ற ‘பால்வீதி’ (1974) கவிதைத் தொகுப்பில் ‘சிந்தர்’ என்ற தலைப்பில் சில ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் இருந்து தமிழில் முதலில் வெளிவந்த முழுமையான ஹைக்கூ கவிதைத் தொகுப்பு அமுதபாரதியின் ‘புள்ளிப் பூக்கள்’ (ஆகஸ்ட் 1984) ஆகும். இந்நூல் தமிழ் மண்ணில் ஹைக்கூ ஒரு தனி இலக்கிய வடிவமாக வேரூன்றப் பெரும் பங்காற்றியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியைச் சேர்ந்த சீனு தமிழமணி என்பவரால் ஹைக்கூவிற்காகவே பிரத்யேகமாகக் ‘கரந்தடி’ என்னும் இதழை 1988 இல் தொடங்கினார். அக்காலப் பகுதியில் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் ஹைக்கூ இயக்கம் முழுவீச்சுடன் வளரத் தொடங்கியது. அறிவுமதி, ஈரோடு தமிழன்பன் போன்ற பல கவிஞர்கள் ஹைக்கூ நூல்களை வெளியிடத் தொடங்கினர்.
ஈழத்தில் மலையகத் தளத்தில் அங்கு வாழ்கின்ற மலையக மக்களின் நாளாந்த வாழ்வியல், துன்ப துயரங்களை, நாடற்றோர் பிரச்சினை, லயத்து வாழ்க்கை என்பவற்றை உள்ளடக்கியதாக்க கவிஞர் சு.முரளிதரன் ‘கூடைக்குள் தேசம்’ (ஏப்ரல், 1988) என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். இதுவே இலங்கையில் இருந்து தமிழில வெளிவந்த முதலாவது ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூலாகும்.
ஹைக்கூ கவிதைகள் தமிழில் வளர்சிசி அடைந்ததோடு நில்லாது, அது குறித்த இலக்கண மற்றும் திறனாய்வு நூல்களும் வெளிவரத் தொடங்கின. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் ‘சூரியப் பிறைகள்’ (1985) நூல் வெளிவந்தது. இதில் ஹைக்கூவுக்கும் தமிழின் உள்ளுறை உவமங்களுக்கும் உள்ள தொடர்பு பேசப்பட்டுள்ளது. தி. லீலாவதி அவர்களின் ‘ஜப்பானிய ஹைகூ’ (1987) நூல் ‘அன்னம் பதிப்பகம்’ வெளியீடாக வந்தது. இந்நூலுக்குக் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரை ஹைக்கூவின் மொழி ஆளுமையை விளக்கியது. ஈரோடு தமிழன்பனின் ‘ஜப்பானிய ஹைகூ 100’ (2011, விழிகள் பதிப்பகம்) என்ற தொகுப்பு நூல் வெளிவந்து ஹைக்கூவின் ஆழத்தையும் வடிவத்தையும் தமிழ் வாசகர்களுக்கு ஆழமாகப் பரிச்சயப்படுத்தியது. பிற்காலத்தில் தமிழ்த்தேனீ இரா. மோகன் தொகுத்து சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ போன்ற தொகுப்பு நூல்கள் தமிழ் ஹைக்கூ வரலாற்றின் வளரச்சியைப் பறைசாற்றின. இவ்வாறாக, பாரதியால் சுட்டிக்காட்டப்பட்டு, அப்துல் ரகுமான், அமுதபாரதி, முரளிதரன் போன்றோரால் காலூன்றி, இன்று ஆயிரக்கணக்கான கவிஞர்களால் ‘துளிப்பா’, ‘குறும்பா’ என்றெல்லாம் அழைக்கப்பட்டுத் தமிழ் இலக்கிய உலகில் உத்வேகத்துடன் வளர்ந்து வருகிறது.
ஹைக்கூ கவிதை தொடர்பாக இதுவரை வெளிவந்த ஆய்வு நூல்களாக தி. லீலாவதியின் ‘இதுதான் ஹைக்கூ’ (1990) என்ற ஹைக்கூ ஆய்வுக் கட்டுரை நூல் முதலாவர் நூலாக வெளியானது. சுஜாதாவின் ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ (1991) நூல் வெளிவந்தது. நெல்லை சு. முத்துவின் ‘தமிழில் ஹைக்கூ’ (1984) ஆராய்ச்சி நூல் வெளிவந்தது. நிர்மலா சுரேஷின் ‘ஹைக்கூ கவிதைகள்’ (1997) ஆராய்ச்சி நூல் வெளியானது. இவ்வாறாக அண்மைக் காலங்களிலும் பல தொகுப்பு நூல்களும் ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன.
5. ஈழத்தில் ஹைக்கூ கவிதை
அ. தோற்றம்.
தமிழ்நாட்டில் பாரதியால் 1916 இல் விதை போடப்பட்ட ஹைக்கூ வடிவம், ஈழத்தில் நேரடியாகப் பரவுவதற்குச் சில தசாப்தங்கள் பிடித்தன. 1970-களின் முற்பகுதியில தமிழ் இதழியலின் தாக்கம் ஈழத்து நவீன கவிதை வெளியில் சு. வில்வரத்தினம், மு. பூபாலசிங்கம், மு. தளையசிங்கம் போன்றோரால் குறும்பாக்களும் சிறு கவிதைகளும் எழுதப்பட்டாலும், ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தின் சாயலைக் கொண்ட துளிப்பாக்கள் ஈழத்துச் சிற்றிதழ்களில் 1970-களின் பிற்பகுதியில் வெளிவரத் தொடங்கின.
ஈழத்தில் 1980 களின் பின்னர் ஏற்பட்ட இனக் கலவரத்தின் தொடர்ச்சியான போர்ச்சூழலால வடக்கு, கிழக்கில் இடப்பெயர்வுகள் தொடங்கிய காலகட்டத்தில், பெரிய நீண்ட கவிதைகளை எழுதுவதை விட, மனதின் அதிர்வுகளை ஒருசில வரிகளில் கடத்தும் ஊடகமாக ஹைக்கூ கவிஞர்களுக்குத் தேவையாயிற்று. சுவடுகள் பதிப்பகம், ஈழத்துச் சிற்றிதழ்கள் வெளியிட்ட ‘துளிப்பாத் தொகுப்புகள்’ ஈழத்தின் துயரங்களையும், இயற்கை அழகையும் பதிவு செய்தன. அவற்றுடன் ஈழத்துச் சிற்றிதழ்களான ‘அக்னி’, ‘சமர்’, ‘போராளி’ போன்ற இதழ்களில் ஹைக்கூ வடிவக் கவிதைகள் தீவிரமாக எழுதப்படலாயின.
இயற்கையை மட்டுமே கருப்பொருளாகக் கொண்ட ஜப்பானிய ஹைக்கூவிலிருந்து விலகி, ஈழத்துச் சூழலின் யதார்த்தங்கள், போர் மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான வடிவமாக இது ஈழத்தில் பரிணமிக்கத் தொடங்கியது. ஈழத்தில் 1970, 1980 களில் ஹைக்கூ கவிதைகளுக்கான வித்து இடப்பட்டது. அந்த வித்து பல மக்கள் கவிஞர்களுக்கூடாகப் பல கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தன. குறிப்பிடத்தக்க ஹைக்கூ தொகுப்புகளில் ஒன்றாகவசு. முரளிதரனின் ‘கூடைக்குள் தேசம்’ (1988 ஏப்ரல்) கவிதைத் தொகுதி அமைந்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் கவிஞர் சார்ள்ஸ் என்பவரின் ‘உனக்குள்ளேயே உள்ளிருப்பு,’ மேமன்கவியின் ‘மின்மினிகளின் மாகாணம்’ ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்களும் வெளிவந்து, அதனைத் தொடர்ந்து ஈழத்தின் தேசிய இன விடுதலைப் போராட்டச் சூழலையும் அதன் தாக்கங்களையும் ஹைக்கூ வடிவத்திற்குள் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தனர்.
ஆ. ஈழத்தில் ஹைக்கூவின் வளர்ச்சி.
ஈழத்தில் மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் கோலோச்சிய காலத்தில், ஹைக்கூ தன்க்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துப் பல தொகுதிகளாக உருவெடுத்தது. 1990-களின் தொடக்கம் ஹைக்கூ கவிதைகள் தனித்து அடையாளம் பெறத் தொடங்கிய காலகட்டமாகும். கவிஞர்கள் தங்களின் உத்திகளாலும் கூர்மையான விம்பங்களாலும் ஹைக்கூவை வளர்த்தெடுத்தனர். ஈழத்தின் மூத்த கவிஞரான முருகையன் மற்றும் பல இலக்கிய விமர்சகர்கள் ஜப்பானிய வடிவமான ஹைக்கூவை, தமிழ் மணத்தோடு ‘துளிப்பா’ என்று அழைக்கத் தொடங்கினர்.
நவீன கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகள் பரவலாக எழுதப்பட்டு, பல தனி மற்றும் கூட்டுத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ஈழத்துக் கவிஞர்களின் ஹைக்கூ கவிதைக்குப் பங்களிப்புச் செய்தவர்களாக, பாலரஞ்சனி சர்மாவின் ‘மனசின் பிடிக்குள்’ (2001, மல்லிகைப் பந்தல் வெளியீடு), ஒலுவில் அஸீஸ் எம். பாயிஸின் ‘உயிர்ச் சிறகுகள்’ (2001 (ஜூலை), அட்ஷயனின் (சண்முகலிங்கம் கோபிரமணன்) ‘இமைப் பொழுதில்’ (2004), இந்நூல் திருகோணமலைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வெளியீடாக வெளிவந்தது. பாயிஸா நெளபலின் ‘கவிநுட்ப துளிப்பா’ (2017) ஓட்டமாவடியைச் சேர்ந்த பெண் கவிஞரான இவரது ஹைக்கூ துளிப்பாக்களின் தொகுப்பு பரவலாகக் பேசப்பட்டது. மூத்த கவிஞர் சோ. பத்மநாதனின் ‘ஈழத்து ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு’ நூல், சி. சிவலிங்கத்தின் ‘ஒரு சோளக்காட்டுப் பொம்மையின் வாழ்க்கை வரலாறு’, க. தணிகாசலத்தின் (கருணாகரன்) ‘ஒரு வழிப்போக்கனின் நிழல்’, தீபச்செல்வனின் ‘மழைக்கால இரவுகள்’ ஆகிய தொகுப்பு நூல்களும் குறிப்பிடத்தக்கனவாக வெளிவந்திருக்கின்றன.
இவை தவிர, ஈழத்தின் பல முன்னணிக் கவிஞர்களான சு. வில்வரத்தினம், சோலைக்கிளி, புதுவை இரத்தினதுரை, சேரன், ராஜகவி ராஹில், அஸ்ரஃப் ஷிஹாப்தீன், மு. புஷ்பராஜன் மற்றும் சோலையூர் குருபரன் போன்றோரும் தங்களது கவிதைகளைப் பொதுவான தொகுப்பு நூல்களுக்குள்ளேயும், சிற்றிதழ்களிலும் பல துளிப்பாக்களையும் ஹைக்கூ வடிவங்களையும் கையாண்டு எழுதியுன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் சிலர் ஹைக்கூவையும் துளிப்பாவையும் வேறுவேறாக மதிப்பிடும் நடைமுறையும் காணப்படுகிறது. ஈழத்தஜதிலிருந்து வெளிவந்த சில கவிதைகளில் சில,
‘பெரு மழை ஒழுக்குக்குக் குடத்தை வைத்தேன். அதுவும் ஓட்டை’.
‘விழுந்த புது நீர்த்துளியால் கலவரமானது குளத்து நீர்ப்பரப்பு’.
‘மரங்கள் அமைதியாக இருக்கின்றன காற்றுதான் அவற்றைத் தொந்தரவு செய்கிறது. (முமன்கவி)
‘வெளியே மழை உள்ளே முடங்கிக் கிடக்கும் குடை’ (சி. சிவலிங்கம்)
‘போர் முடிந்த நிலம் மழை பெய்த பிறகும் சிவப்பாய் ஓடும் ஆறு’. (தீபச்செல்வன்)
‘முறிந்து விழுந்த மரம் இன்னமும் பூக்கிறது பறவைகளின் நினைவில்.
‘கூடு திரும்பும் சிறகுகளில் பறவைகள் மறையும் சூரியன்’. (சோ. பத்மநாதன்)
சமூகச் சீர்கேடு தடுமாறும் இளைஞர் வாழ்வு போதைப் பொருள்’. (சோலையூர் குருபரன், 2023)
‘அழிந்த கிராமம் பழைய முகவரியைத் தேடுகிறது காற்று’. க. தணிகாசலம் (கருணாகரன்)
‘அடர்ந்த இருள் ஒரு மின்மினிப் பூச்சி வெளிச்சத்தின் முகவரி’. (கருணாகரன்)
‘உழவனைச் சாப்பிட்டு கடன் ஏப்பமிட்டது வறுமையின் கொடுமை’ (ராஜகவி ராஹில், 2000)
இ. போர்க் காலம் மற்றும் புலம்பெயர் சூழலில் ஹைக்கூவின் வவளர்ச்சி.
போர்ச் சூழலில் புலம்பெயர்வு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்துக் கவிஞர்கள், தங்களது தாய்மண் நினைவுகள், அகதி வாழ்வு, இன அழிப்பின் வலிகள் ஆகியவற்றைக் ஹைக்கூ வடிவத்தில் வடிக்கத் தொடங்கினர். பாலரஞ்சனி சர்மா ‘மனசின் பிடிக்குள்’ (2001) என்ற தொகுப்பு நூல் ஈழத்திலிருந்து ஹைக்கூ வளர்ச்சிக்கு வலு சேர்த்தன. ஜெர்மனியில் வாழ்ந்துவரும் விக்னா பாக்கியநாதனின் ‘அம்மா என் ஹைக்கூ’ (2007) தொகுப்பு புலம்பெயர் ஈழத்து ஹைக்கூ இலக்கியத்திற்குச் சான்றாக விளங்கின.
போர்க் காலத்தில் புதுவை இரத்தினதுரை போன்ற மூத்த கவிஞர்கள் தங்களது கவிதைப் பரப்பில் குறும்பா, துளிப்பா வடிவங்களை நுட்பமாகக் கையாண்டுள்ளனர்.
6. தமிழ்க் ஹைக்கூ கவிதையின் அமைப்பிலக்கணம்
ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்கு 5 – 7 – 5 என்ற ஒலியசைக் கணக்கு உள்ளதனால் (மொத்தம் 17 ஒலிகள்) தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் கட்டமைப்பு வேறுபாடு உள்ளது போல் தமிழில் இந்த மாத்திரை/அசை கணக்கைத் துல்லியமாகப் பின்பற்ற முடியாது. எனவே, தமிழ் கவிஞர்கள் அதன் வடிவ இலக்கணத்தை (Formal Structure) பின்வருமாறு வகுத்துக் கொண்டனர்.

1.1. ஹைக்கூ கவிதையின் கட்டமைப்பு.
ஹைக்கூ கவிதையானது குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட வரிகளிலோ அல்லது அசைகளிலோ அமைக்கப்படுவதே அதன் கட்டமைப்பாகும். தமிழ் ஹைக்கூவில் கண்டிப்பாக மூன்று வரிகள் மட்டுமே அமைந்திருக்க வேண்டும். முதல் வரியில் 3 சொற்களும் இரண்டாம் வரியில் 4 சொற்களும் மூன்றாம் வரியில் 3 சொற்களும் (3-4-3) கொண்டு அமைந்திருப்பது பொதுவான மரபாகும். இம்மரபைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் சுருக்கமாக இருக்க வேண்டும். அண்மைக் காலங்களில் 2.3.2 சொற்களும், 2.2.2 சொற்களும், 2.2.1 சொற்கள்யும் பயன்படுத்தி மூன்று அடிகளில் எழுதி வருகின்றனர் இன்னும் சிலர் 1.2.1 சொற்களிலும் ஒரு சிலர் மூன்று சொற்களிம் எழுதுவதையும் (1.1.1) காண முடிகிறது. எதுகை, மோனை, இயைபு போன்ற மரபுக்கவிதை இலக்கணக் கட்டுப்பாடுகள் இதற்குத் தேவையில்லை. முதல் இரண்டு வரிகள் ஒரு காட்சியை விவரிக்க, மூன்றாவது வரி ஒரு ‘திடீர் திருப்பத்தை’ (Punch/Twist) தந்து கவிதையை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
“மலைப் பாதை நெடுகிலும் சோர்வோடு நகரும் மனிதர்கள். கூடைக்குள் தேசம்” (சு.முரளிதரன், 1988)
“ஏக்கப் பெரு மூச்சு ஏழையின் வீட்டில் அடுப்புக்கு விடுதலை. கூலித் தொழிலாளியின் வறுமை. (சோலையூர் குருபரன் (1996)
1.2. விதிமுறை:
இயற்கை, மனித வாழ்க்கை, சமூகச் முரண்கள், சாதாரண மக்களின் வறுமை, அரசியல் விமர்சனம், தத்துவார்த்த உண்மைகள் போன்ற பாடுபொருளாக அமையலாம். கடந்த காலத்தைப் பற்றிப் பேசாமல், நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வை அல்லது காட்சியப் பதிவு செய்வதாக அமைந்திருக்க வேண்டும்.
1. கவிதையின் கரு (Theme):
ஆரம்பசாலக் ஹைக்கூக்களின் முதன்மைக் கருப்பொருளாக இயற்கையும், பருவகால மாற்றங்களுமே இடம் பெற்றிருந்தது. ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தைக் குறிக்கும் சொல் (Kigo) இதில் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. இயற்கையின் ஒளியில் மனித வாழ்வின் வாழ்வியல் தத்துவங்களையும், எதார்த்தத்தையும், அகவுணர்வுகளையும் கவிதைகள் தொட்டுச் சென்றன. ஆனால், தமிழ் கவிதைகளில் சமூக அவலங்கள், அரசியல், காதல், வறுமை, தத்துவம், மனிதநேயம் என மனித வாழ்வின் எல்லாப் பக்கங்களும் கருவாக மாறின.
‘பிச்சைக்காரப் பாத்திரம்
விழுந்து உருண்டோடுகிறது…
சில்லறைகளின் சத்தத்தோடு பசி’ (அறிவுமதி)
2. வடிவம் (Form): மூன்று வரிகள் கொண்ட கச்சிதமான கட்டமைப்பு. ஒரு வார்த்தை கூடினாலும் குறைந்தாலும் கவிதையின் தராசு மாறிவிடும். தேவையற்ற அடைமொழிகளோ, நீண்ட வர்ணனைகளோ இன்றி மிகச் சுருக்கமாக அமைந்திருக்கும். வரிகளுக்கு இடையே உள்ள மௌனமும், வாசகர் சிந்திப்பதற்கான வெளியும் இதன் வடிவத்தின் முக்கிய அம்சமாகும்.
‘யாரையும் அச்சுறுத்தவில்லை
இருப்பினும் பயப்படுகிறார்கள்
சோளக்காட்டுப் பொம்மை’. (சி. சிவலிங்கம்)
3. உருவம் (Structure /Form & Shape)):
வாசகன் படிக்கும்போது அவன் கண்ணெதிரே ஒரு புகைப்படம் (Snap) போல அந்த உருவம் தெரிய வேண்டும். சிதறாத ஒற்றைக் காட்சியை அல்லது ஒரு மையப் புள்ளியை மட்டும் தன் உருவமாகக் கொண்டிருக்கும்.
தொட்டில் குழந்தைக்காக
நிலாவை இழுக்கிறது…
ஜன்னல் கயிறு’ (மித்ரா)
4. உள்ளடக்கம் (Content):
வாசகனுக்கு ஓர் அதிர்ச்சியை அல்லது ஆச்சரியத்தை ஊட்டும் வகை உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சொற்கள் குறைவாக இருந்தாலும், அது தரும் செய்தி ஆழமானதாக இருக்க வேண்டும். “சொன்னதை விட சொல்லாமல் விட்டதில்” தான் ஹைக்கூவின் ஜீவன் அமைந்திருக்கிறது. கணநேரப் பதிவு: சூரிய அஸ்தமனம், இலை உதிர்தல், மழைத் துளி வீழ்ச்சி போன்ற ஒரு குறிப்பிட்ட படிமத்தையோ உத்தியையா மையப்படுத்தியதாக அமைந்திருக்கும். அறிவுசார் தத்துவார்த்தங்களை விட, புலன்கள் வழியே (பார்த்தல், கேட்டல், உணர்தல்) பெறப்படும் நேரடி அனுபவமே இதன் உள்ளடக்கமாக அமைந்திருக்கும்.
‘இரவு முழுதும் மழை
விடிந்ததும் தெரிகிறது.
குளத்தின் கொள்ளளவு’. (சோ.பத்மநாதன்)
‘வயலில் நட்டது
நாற்று மட்டுமல்ல
என் தாயின் கால்களும்’. (அறிவுமதி)
5. உத்தி (Technique):
இரண்டு வெவ்வேறு காட்சிகளை அல்லது கருத்துகளை அருகருகே வைத்து, அவற்றுக்கிடையேயான தொடர்பை வாசகரின் ஊகத்திற்கு விடுவது, இரு காட்சிகள் /முரண் இணைப்பு (Juxtaposition) இதன் முக்கிய உத்தியாகும். ‘படிம உத்தி’ (Imagery) மற்றும் ‘முரண் உத்தி’ (Paradox). இரண்டு தொடர்பில்லாத விடயங்களை அல்லது முரண்பாடான காட்சிகளை மோதவிட்டு, அதிலிருந்து ஒரு புதிய பொறியை உருவாக்குவதுதான் ஹைக்கூவின் முதன்மை உத்தியாகும். கவிதை ஒரு தெளிவான முடிவுக்கு வராமல், வாசகரின் சிந்தனையில் விரிவடைந்து கொண்டே செல்வது ஹைக்கூவின் பலமான உத்தியாகும்.
‘விழுந்த பூவை
கிளைக்குத் திருப்புகிறது
பட்டாம்பூச்சி’. (தமிழன்பன் -ஜப்பானிய மரபுத் தழுவல் கவிதை)
பச்சைத் தோட்டங்களில்
வியர்வை சிந்தி உழைப்போர்
வாழ்வே சுமை. (சு.முரளிதரன், 1988)
6. கனதி (Gravity/Depth):
கவிதையைப் படித்து முடித்த பிறகும், மனதில் ஏற்படும் அந்தப் பாரம் அல்லது சிந்தனை அதிர்வுதான் அதன் கனதியாகும். கவிதை சிறியது, ஆனால் அதன் தாக்கம் பெரியது.
‘வளைகின்ற மூங்கில் நிமிர்கின்ற மூங்கில் பனித்துளி கீழே’. (மு. மேத்தா)
கூண்டு திறந்தே இருக்கிறது
பறவை
பறப்பதே இல்லை. (அமுதபாரதி)
தமிழ் ஹைக்கூ கவிதைகளில் படிமம்(Imagery), குறியீடு (Symbolism) என்பவை கவிதையின் ஆன்மாவாகத் திகழும் மிக முக்கியமான இரண்டு கருவிகளாகும். குறைந்த சொற்களில் ஆழமான கருத்தை வெளிப்படுத்த இவை ஹைக்கூ கவிதைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
1. படிமம் (Imagery):
கவிஞன் தான் கண்ட, கேட்ட, நுகர்ந்த காட்சிகளை அல்லது உணர்வுகளை வாசகனின் மனக்கண்ணில் அப்படியே ஒரு சித்திரமாக (Picture) மாற்றி எழுப்பும் கலைப் படைப்புக்கே ‘படிமம்’ என்று பெயர். இது வாசகனின் ஐந்து புலன்களையும் (கண், காது, மூக்கு, நாக்கு, மெய்) தட்டி எழுப்பும் ஆற்றல் கொண்டது. இது காட்சிப் படிமம், ஒலிப் படிமம், சுவைப் படிமம், மணப் படிமம், ஸ்பரிசப் படிமம் எனப் பல வகைப்படும். ஹைக்கூவில் பெரும்பாலும் காட்சிப் படிமங்களே (Visual Imagery) அதிகமாகக் கையாளப்படுகின்றன.
‘குளத்தில் நிலா
அழகாகக் காட்சி தருகிறது. ஒளிரும் சிறுமி’. (ராஜகவி ராஹில், 2011)
இலையுதிர் காலம்
மரத்தின் அடியில்
இலையின் மரணம். (தீபச்செல்வன்)
2. குறியீடு (Symbolism):
ஒரு குறிப்பிட்ட பொருளோ, விலங்கோ, இயற்கைக் கூறோ தனக்குரிய நேரடிப் பொருளைத் தாண்டி, வேறு ஒரு பெரிய தத்துவத்தையோ, சமூக யதார்த்தத்தையோ அல்லது உணர்வையோ குறிப்பதற்குக் குறியீடு என அழைப்பர். ஹைக்கூ கவிதைகள் வெளிப்படையாகப் பேசாமல், குறியீடுகள் மூலம் வாசகனின் சிந்தனைக்குத் தீனி போடுகின்றன.
‘மின்சாரக் கம்பி
உட்கார்ந்து ஓய்வெடுக்கிறது
ஒரு பறவை. (அப்துல் ரகுமான்)
‘வெயிலில் காய்ந்த
சருகின் மீது விழுந்தது
ஒரு துளி மழை’
படிமம், குறியீடு ஆகியவற்றின் பிரதான நோக்கம் காட்சியை அல்லது உணர்வை வாசகரின் மனக் கண்முன்னே நிறுத்துவதாகும். ஒரு பொருளின் மூலமாகப் பெரிய கருத்தையோ அல்லது தத்துவத்தையோ உணர்த்துவது. புலன்களுக்கு வேலை கொடுக்கிறது. புத்திக்கும் கற்பனைக்கும் வேலை கொடுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், படிமம் என்பது கவிதைக்குரிய ‘வடிவத்தையும் அழகையும்’ தெளிவுபடுத்த, குறியீடு என்பது கவிதைக்குரிய ‘உள்ளடக்க ஆழத்தையும் கனதியையும்’ தருகிறது.
காலப்போக்கில் ஹைக்கூ கவிஞர்களில் பலர் வித்துவத் திறத்தோடு கட்டமைப்பு விதிமுறைகளை மீற்த் தமது போக்கில் அர்த்த புஸ்டியான கவிதைகளையும் எழுத்யுள்ளனர். அவற்றுள் சில கவிதைகள்.
தாளத்தில்லா மழைத் துளிகள் தரை மீது’ (தமிழ்ப் பித்தன்)
தனிமை சுவரில் நிழல். (ஈரோடு தமிழன்பன்)
சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி மலர் முத்தம். (மு. மேத்தா)
நதிநீர் குளிக்கும் வெயில். (அறிவுமதி)
கண்ணீர் காய்ந்தாலும் சுவடு உண்டு’ )அப்துல் ரகுமான்)
வெட்டிய மரத்தினில் கண்ணீர்! (சிற்பி பாலசுப்பிரமணியம்)
ஆயுள் குறைந்த தீக்குச்சி. (மீரா)
நிலவொளி மரக்கிளையில் பாம்பு. (புவியரசு)
‘கூட்டுக்குள் அடைந்த சிறகுகள்’ (நா. காமராசன்)
‘விழுந்த மலரின் கிளைக்குத் திரும்பல்… அடடா, வண்ணத்துப்பூச்சி’ (ஈரோடு தமிழன்பன்)
‘வெட்ட வெட்ட வளர்கிறது நகமல்ல… லஞ்சம்’ (நா.காமராசன்)
இவ்வாறாக ஜப்பானின் ‘ஹொக்கூ’ வடிவில் எடோ காலத்தில் பிறந்து, பாரதியாரால் தமிழில் சுட்டிக்காட்டப்பட்டு, 1970 களுக்குப் பின்னர் தமிழ் மண்ணின் மரபோடும் சூழலோடும் இரண்டறக் கலந்து இன்று அநேக கவிஞர்களால் துளிப்பா என்றும் அழைக்கப்பட்டுப் பல நூறு தொகுதிகளுடன் மிகச் சிறப்பாக வளர்ந்து வருகிறது.
ஹைக்கூ கவிதையின் தற்போதைய நிலை.
இன்று தமிழ் இலக்கியத்தில் ஹைக்கூ கவிதைகள் மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் வடிவமாக மாறியுள்ளது. புலனம், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின், சுருக்கமாக எழுதும் பழக்கம் பெருகியதால் ஹைக்கூ எழுதுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சிற்றிதழ்களைத் தாண்டிச் சில சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெருவாரியான மக்களிடம் சென்றடைந்து வருகிறது. ஹைக்கூ ஒரு மின்னல் கீற்று போன்றது. தோன்றுவது ஒரு நொடிதான், ஆனால் அதன் வெளிச்சம் ஒட்டுமொத்த வானத்தையும் (மனதையும்) காட்டிவிடும்.
3. தற்போதைய நிலை (Current Status)
டிஜிட்டல் ஊடகங்களின் தாக்கம்: தற்காலத்தில் அச்சுப் புத்தகங்களை விட முகநூல் (Facebook), வலைப்பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ஈழத்திலும், உலகெங்கும் பரந்து வாழும் ஈழப் புலம்பெயர் மக்களிடத்திலும்
உலகெங்கும் பரந்து வாழும் ஈழப் புலம்பெயர் மக்களிடத்திலும்
ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் ஹைக்கூ கவிதைகளின் (அங்கு பரவலாக ‘துளிப்பா’ என்றும் அழைக்கப்படுகிறது) தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை ஆகியன பற்றிய விரிவான கண்ணோட்டம் ஆண்டு மற்றும் நூல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
![]()