கறுப்பு ஜூலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ். நகரில் அனுஷ்டிப்பு

தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை-04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள-பௌத்தப் பேரினவாத ஆட்சியாளர்களால் திட்டமிட்டு இனப் படுகொலை அரங்கேற்றப்பட்ட 43 ஆவது ஆண்டில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும், இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி முக்கியஸ்தர் திருமதி.கிருபா கிரிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், மூத்த போராளியான பொன் மாஸ்டர் பொதுச் சுடரேற்றி அஞ்சலித்தார்.
அதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ்மக்களுக்காகவும் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர்
![]()