‘தங்கக் காலணி’ விருதைக் கைப்பற்றுவாரா மெஸ்ஸி?

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான ‘தங்கக் காலணி’ (கோல்டன் பூட் ) விருதுக்கு ஆர்ஜென்ரீனா அணியின் ஜாம்பவான் வீரரான லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் நிறைவு செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலே கோலடிக்க மெஸ்ஸி 2 உதவிகள் செய்ததன் மூலமாக, இந்த ரேஸில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – ஆர்ஜென்ரீனா அணிகள் விளையாட உள்ளன. வியாழன் அதிகாலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்ரீனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. 84 நிமிடங்கள் வரை ஆர்ஜென்ரீனா அணியால் முதல் கோலை கூட அடிக்க முடியவில்லை.
ஆனால் 85வது நிமிடத்தில் என்சோ ஃபெர்னாண்டஸ் மற்றும் 2ஆம் பாதியின் கூடுதல் நிமிடத்தில் லொட்டாரோ மார்ட்டினஸ் இருவரும் அசத்தலாக கோல் அடித்தனர். இவர்கள் இருவரும் கோல் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் லியோனல் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் மெஸ்ஸியால் ட்ரிபிள் செய்து பாக்ஸ் பக்கமே செல்ல முடியவில்லை. இதனை உணர்ந்து பாஸ் கொடுத்து இங்கிலாந்து திட்டத்தை தவிடு பொடியாக்கினார்.
இந்த 2 பாஸ்களும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக ஃபிபா உலகக் கிண்ணத் தொடருக்கான ‘தங்கக் காலணி’ க்கான ரேஸில் மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மெஸ்ஸி 8 கோல்களை அடித்துள்ள நிலையில், கோல் அடிக்க 4 உதவிகள் செய்துள்ளார். இவருக்கு பின்னால் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 8 கோல், 3 உதவிகள் மூலம் 2வது இடத்தில் இருக்கிறார்.
நோர்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்களுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பெல்லிங்கம் 6 கோல், 1 உதவியுடன் மூலம் 4வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஹாரி கேன் 6 கோல், 1 உதவி மூலம் 5வது இடத்திலும் இருக்கின்றனர். ‘முதல் 5’பேருள்ள பட்டியலில் உள்ள வீரர்கள் யாரும் இறுதிப் போட்டியில் ஆடப் போவதில்லை.
இருப்பினும் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அதில் கிலியன் எம்பாப்பே, ஹாரி கேன், பெல்லிங்கம் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இருப்பினும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி ஒரேயொரு கோல் அடித்தால் கூட எளிதாக கோல்டன் ‘தங்கக் காலணி’ விருதை கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()