கட்டுரைகள்

அரசியலறியாத தமிழரசியல்வாதிகள்… ஏலையா க.முருகதாசன்

தமது நாடாளுமன்ற இருப்பிற்காகவும்,சலசலப்பான அரசியல் சத்தங்களை ஊடகங்களில் வரச்செய்து அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு சுற்றுலா போய்வரும் அரசியலைச் செய்து கொண்டிருப்பவர்கள்தான் தமிழரசியல்வாதிகள்.
தமிழ்மக்களும்,இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு தலையைச் சற்றி மூக்கைத் தொடுவது மாதிரியும் எவடம் எவடம் புளியடி புளியடி என்று கண்ணைப் பொத்திக் கொண்டு திரியிற மாதிரியும் அரசியல் செய்கின்ற இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளை இலங்கை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இனத்தை,உரிமையைச் சொல்லி தாங்கள் ஏமாற்றி வருவதை தமிழர்கள் புரிந்து கொண்டு விளித்துக் கொள்ளக்கூடாதென்பதற்காக இப்பொழுது கையில் துருப்புச் சீட்டாக வைத்திருப்பது மாவீரர்களின் தியாக்தை.

தமக்கு ஆணை பிறப்பித்த பாதை சரியோ பிழையோ என்பதற்கப்பால் அது சாத்தியப்படுமா சாத்தியப்படாது என்பதற்கப்பால் களத்தில் நிற்கும் ஒரு இராணுவ வீரன், தலைமைத்துவத்தின் ஆணைக்கு எவ்வாறு பணிகிறானோ அவ்வாறு விடுதலைப்புலித் தலைமைக்குப் பணிந்து எதுவித தர்க்கவாதத்திற்கும் இடம்கொடாது போர்புரிந்து சாவைத் தழுவிக் கொண்ட அவர்களின் தியாகத்தையும் தமிழரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றாலும் சரி மாவீரர் தியாகம் என்றாலும் சரி அவை ஈழத்தமிழர் வாழ்வின் வரலாற்றில் மறக்கவோ நிராகரிக்கவோ இருட்டடிப்புச் செய்ய முடியாத விடயமே.

ஆனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமையின் செயலியை வலுவாக்குவதற்கு திரும்பத் திரும்ப அதைச் சொல்லி அரசியல் நடத்துவோமானால் தமிழர்களின் அரசியல் காலாவதியான அரசியலாகவே மாறும்.

வாழைப்பழத் தோலில் கால் வைத்தால் சறுக்கத்தான் செய்யம் விழவேண்டியும் வரும் என்று தெரிந்து கொண்டே தேர்தல் நேரங்களில் தமிழரசியல்வாதிகளின் ஆக்ரோசமான சோழர் பாண்டியர்களை உதாரணம் காட்டியும் போதாக்குறைக்கு மூத்தமொழி தமிழ்மொழி என்று புளகாங்கிதக் கதைகள் கூறியும் சூத்திர மாடுகள் மாதிரி ஒரு வட்டத்தையே சுற்றி வருகின்ற தமிழரசியல்வாதிகளை நம்பி வாக்குப் போட்டு வாக்குப் போட்டு இலவுகாத்த கிளிபோல தமிழர்கள் ஏமாந்து கொண்படிருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது.

பல்லினம் வாழும் நாடான இலங்கையில், ஒவ்வொரு இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தம் மக்களால் தாம் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக அவர்களில் சிலர் தமது மக்களின் மொழி மதம் போன்றவற்றை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவதும்,தொடர்ச்சியாக அதனைக் கருப்பொருளாக வைத்தே பிரச்சாரம் செய்வதாலும் அடிப்பார் அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல மெல்ல மெல்ல மக்களும் தம்மினப்பெருமைகளை உள்வவாங்குவது மட்டுமல்ல, அதனை ஒரு பிடிமானமாக மக்கள் தவறாகக் கணித்து அதற்கூடாக தமக்கான அரசியலைக் கணிப்பது நாட்டுக்கு கேட்டையே விளைவிக்கும்.அதன் பலாபலன்தான் இன்னும் இன்றும் தொடரும் இனமுரண்பாடுகளாகும்.

ஒட்டுமொத்தமான ஒரு நாட்டின் வளர்ச்சி அபிவிருத்தி மக்களின் நலமான வாழ்வு போன்றவற்றுக்கான மூலத்திட்டத் தளமாக இருக்கின்ற பொருளாதாரக் கூறுகளின் மீது கவனம் செலுத்தாது தம்மினம் சார்ந்த மொழி மதம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வளமான வாழ்வைச் சிதைக்கும்.

India and Sri Lankan Tamil political parties | The Morning

தம்மினத்தை மட்டுமே உயர்வாக பிரதிநிதிகள் ஆங்காங்கே வெகுஜனக் கூட்டங்களில் சொல்வதால்,தம்மோடு வாழுகின்ற மற்றைய இனத்தவர்களைவிட தாமே உயர்ந்தவர்கள் என்ற இசைவாக்கம் பெற்றுவிடுகின்றனர்.இது ஒருவித
அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் இத்தகு தவறான அரசியல் அணுகுமறையைக் தமது அரசியல் இருப்புக்காக கையாள்வதால் இனமுரண்பாடுகளும் இன விரோதங்களும் மெல்ல மெல்ல மறைபொருளாக வளர்ந்து பின்னர் அது பகிரங்கமாகத் தெரியத் தொடங்கிவிடுகிறது.

தத்தம் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாம் தொடர்ந்து தம்மினத்துக்கு பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்,அதன் மூலம் கிடைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தச் சம்பளம் தொடங்கி தமக்குக் கிடைக்கின்ற சலுகைகள் வரை அதனை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவே தாம் ஒருநாட்டினுடைய வளர்ச்சியையும் மக்களின் நலமான வாழ்வையும் சீர்குலைக்கிறோம் என்பதைத் தெரிந்தும்,இச்சுயநிலமிக்க தவறைச் செய்கிறார்கள்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் தமது அரசியல் இருப்புக்கான கருப்பொருளாகக் கொண்டு செய்யும் இச்செயலை நாட்டுமக்களும் அதிக ககவனம் எடுப்பதில்லை அத்தகையோரை நிராகரிக்கும் எண்ணத்தை ஒத்தி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்று இலங்கையில் நடப்பது இத்தகு அரசியல் நிலவரேமாகும்.ஒரு சிறுபான்மை இனம் எவ்வாறு அரசியலைச் செய்ய வேண்டும்: என்பதை இப்பொழுதும் சரி இதற்கு முன்பும் சரி தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் செய்தவர்களில் பெரும்பாலானோர் தாம் ஒரு சிறுபான்மையினத்தைப் பிரதிநித்துவப்படுத்தபவர்கள் அமது அரசியல் அணுகுமறை வேறாக இருக்க வேண்டும் என்பதை உணராதவர்கள் அல்லர்,உணர்ந்தும் தமிழர்களையும் தவறாகவே வழிநடத்தி வந்திருக்கிறார்கள்.

இலங்கை மக்கள் என்போர் தமிழர,; சிங்களவர், முஸ்லீம்கள்,மலையகத் தமிழர்,இன்னும் பல்வேறு காரணங்களால் இலங்கைக்கு வந்து அங்கு வாழத் தொடங்கிய மலையகத் தமிழர்கள் என சுட்டிக்காட்டலுக்கு உட்படாத இந்தியத் தமிழர்கள்,மலையாளிகள்,அரிதான போத்துக்கீச வம்சாவழியினர்,ஒல்லாந்த வம்சாவழியினர்,,பிரித்தாளிய வம்சாவழியினர்,மிக அரிதான தெலுங்கு வம்சாவழியினர்,அவ்வப்போது பிரித்தாளியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர் என அனைவரையுமே இலங்கையராக இலங்கைக் குடிமக்களாக கருதித்தான் அரசியல்வாதிகள் அரசியல்: அணுகுமுறையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

Tamil candidate launches Sri Lankan presidential election manifesto | Tamil  Guardian

படகில் எந்தப் பக்கத்தில் ஓட்டை இருந்தாலும் அது முழுப்படகையுமே கவிழ்க்கும் ஆபத்தான ஓட்டை என்பதைச் சிந்திக்காத அரசியல்வாதிகளே இலங்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் இலங்கைத் தமிழரசியல்வாதிகளின் அரசியல் சித்தாந்தம் என்பது கவ்வைக்கு உதவாத காலாத்தால் செயலிழந்து போன சித்தாந்தமாகும்.
ஒரு சிறுபான்மையினம் பல்லினம் வாழும் ஒரு நாட்டில் எவ்வாறு புத்திசாலித்தனமான அரசியல் நடத்த வேண்டுமென்பதில் தோற்றுப் போய் தமது பலவீனத்தை வெளிக்காட்டிய இனமாக இருப்பவர்கள் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளே.. தம்மைப் புத்திசாலித் தமிழர்கள் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வடகிழக்குத் தமிழர்கள் அரசியலில் அரிச்சுவடியைக்கூட இன்னும் கற்காதவர்கள்.அதனால்தான் தவறானவர்களை தொடர்ந்தும் தெரிவு செய்து வருகிறார்கள்.

அதனால்தான் திரு.அர்ச்சுனா இராமநாதனும் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் பிரதிநிதியாக நுழைய வாயப்புக் கிடைத்திருக்கின்றது.

நாடாளுமன்றம் என்பது பல்துறை அறிஞர்களைக் கொண்ட சபையாக இருக்க வேண்டும்.ஆனால் இலங்கை நாடாளுமன்றம் ஒருவர் மாறி ஒருவரைக் குறை சொல்லும் இடமாக மாறிவிட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள்,இதுவரையில் நாட்டின் நலன்கருதி அனைத்து மக்களின் வளமான வாழ்வுக்காக நாட்டின் பொருளாதாரம் பற்றியும்,பல்துறைசார்ந்து அப்பொருளாதார அபிவிருத்திகள் பற்றிப் பேசியிருக்கிறார்களா?.

இவர்களுக்கு, இலங்கையின் மண்வளம் பற்றியோ,அம்மண்ணுக்குள் இருக்கும் கனிமவளங்கள் பற்றியோ ஆறுகள் குளங்கள் பற்றியோ,விவசாய நிலங்கள் பற்றியோ,காடுகள் பற்றியோ,மலைவளங்கள் நீர்வீழ்ச்சிகள் பற்றியோ,இலங்கையின் எந்தெந்தப் பிரதேசத்தில் என்னென்ன பயிர்களை பயிரிட முடியும் என்பது பற்றியோ எதுவுமே தெரியர்து.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்கனிமங்கள் பற்றியோ மீன்வகைகள் பற்றியோ எதுவுமே தெரியாது.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல்  தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி அநுர - UTV News Tamil

தமிழரசியல்வாதிகள் தமிழ்மக்களை தமிழின உணர்வை முன்னிலைப்படுத்தி அவர்களை உசுப்பேத்தி தமது நாடாளுமன்ற இருக்கைகளை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள்அதுவே அவர்களின் இலக்கு.அத்தகையானவர்களை தமிழ்மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button