பலதும் பத்தும்

எஜமானை காப்பாற்றி நல்ல பாம்புடன் சண்டை: உயிரை விட்ட நாய்

தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ்(வயது 35), திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி காயத்ரி, 2 குழந்தைகள் இருக்கின்றனர், இவர்களுடன் காயத்ரியின் தாயாரும் உடன் இருக்கிறார். இவர்கள் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை காயத்ரியின் தாயார் இரவு உணவு சமைப்பதற்காக பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார், அப்போது அந்த இடத்தில் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து நின்றது.

இதைப்பார்த்து அவர் கூச்சலிட வீட்டில் அனைவரும் வந்து விட்டனர், சிஞ்சான் ஓடி வந்து பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது.

பாம்பு சிஞ்சானை கடிக்க சண்டையில் பாம்பை இரண்டு துண்டாக்கிவிட்டது, சிறிது நேரத்தில் சிஞ்சான் மயங்கி இறந்துவிட்டது.

எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக உயிரை விட்ட சிஞ்சானின் செயல் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button