உலகம்

ஈரானில் கமெய்னி இறுதிச்சடங்கு; சர்வதேச அளவில் பதற்றத்தை கிளப்பிய ட்ரம்பின் கருத்து

ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கின்போது, ஒரே குண்டை வீசி அந்நாட்டின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களையும் வீழ்த்தியிருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தெஹ்ரானில் அயதுல்லா கொமெய்னிக்கு பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வு எங்களுக்கு ஒரு இராணுவ வாய்ப்பை அளிக்கிறது.

ஒட்டுமொத்தமாக வீழ்த்திவிடலாம்…

ஆனால், தற்போதைய இராஜதந்திர முயற்சிகள் காரணமாக அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை. ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள நிலையில், ஒரே குண்டு போதும், அவர்களை ஒட்டுமொத்தமாக வீழ்த்திவிடலாம்.

ஆனால் நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை; ஏனெனில் அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த ஆள் இல்லாமல் போய்விடுமென வோஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளிக்கும்போது ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன்,ஈரானியர்கள் கொமெய்னியை எதிர்ப்பதாகவும், இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தின் கண்ணீர் போலியானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

மேலும், ஒப்பந்தத்திற்காக ஈரானிய தலைவர்கள் கெஞ்சுவதாகவும், ஒரு வாரத்திற்குப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆர்மீனியாவின் ஈரான் தூதரகம்,ட்ரம்பிற்கு நாகரிகமோ, வரலாறோ, கண்ணியமோ இல்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ட்ரம்பின் இந்த பேச்சு மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button