கவிதைகள்
என்னை விட நீ இளமையானவன்…. கவிதை… முல்லைஅமுதன்

என் வயதைக் கேட்டு
‘பழசு’ என்கிறார்கள்
சபையில் தனியே உட்காரவைத்துவிடுகிறர்கள்.
திருவிழாவிலும் அப்படியே.
அழுக்காகிவிடுமென்பதற்காக
மகிழூர்தியில்
அமர மகள் அனுமதிப்பதில்லை.
மனைவி இருந்திருக்கலாம்.
‘தேவதையைக் கண்டேன்’ –
வானொலி குரல் தர கால்கள் தாளம் போட்டது.
பாடலைப் போல
அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை.
முற்றத்தில் வந்தமர்ந்த பறவை சொல்லிற்று..
‘என்னை விட நீ இளமையானவன்’
திரும்பிப்பார்த்தேன்.
கவிதைகள் சிரித்தபடி,
கைகட்டி நின்றன.
![]()