பலதும் பத்தும்

காப்பீட்டுப் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவனைக் கொன்ற மனைவி!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுமா. சந்தீப் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த புண்டலிகா டோம்பர் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

சந்தீப் தனது பெயரில் 2 கோடி ரூபாவுக்கு காப்பீடு எடுத்து இருந்தார். சந்தீப் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி விபத்தில் சிக்கினார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். விபத்தை பயன்படுத்தி கணவரை கொலை செய்துவிட்டு காப்பீடு தொகையை பெற சுமா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

அதன்படி மார்ச் மாதம் 15 ஆம் திகதி சிகிச்சையில் இருந்த கணவருக்கு ஊசி மூலம் விஷத்தை செலுத்தினர். சிறிது நேரத்தில் சந்தீப் பரிதாபமாக இறந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி கணவர் இறந்து விட்டதாக உறவினர்களை நம்ப வைத்து இறுதி சடங்குகளை செய்தார்.

பின்னர் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்து காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் சகோதரரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸில் புகார் அளித்தார். பொலிஸார் சுமாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து சுமா அவரது கள்ளக்காதலன் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்தவர்கள் என 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button