பலதும் பத்தும்

உலகின் முதல் டிரில்லியனர்: வெறும் 400 சதுர அடி சிறிய வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்

உலகின் முதல் டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக உயர்ந்த எலான் மஸ்க் டெக்சாஸில் வெறும் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டில் வசிப்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

SpaceX நிறுவனத்தின் பங்கு சந்தை அறிமுகத்தை தொடர்ந்து உலகின் முதல் டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக எலான் மஸ்க் உயர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

எலான் மஸ்க்கின் தொழில் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததை அடுத்து அவரது சொத்து மதிப்பானது 1.1 டிரில்லியன் டொலரை தாண்டியது.

பல்லாயிரம் கோடி சொத்துகள் வைத்து இருந்தாலும் எலான் மஸ்க் ஆடம்பரமான வாழ்க்கை முறையை தவிர்த்து வருகிறார்.

கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸுக்கு மாறிய பிறகு 2020ம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்த பல சொத்துக்களை எலான் மஸ்க் விற்பனை செய்து விட்டார்.

தற்போது டெக்சாஸில் உள்ள போகா சிகா(Boca Chica) பகுதியில் உள்ள சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார்.

இந்த வீடு SpaceX நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். எனவே இதற்காக SpaceX நிறுவனத்திற்கு  அவர் வாடகை கொடுத்து வருகிறார்.

 

இந்த வீடு வெறும் 400 சதுர அடி மட்டுமே கொண்டது ஆகும். இதில் ஒரு வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் படுக்கையறை ஆகியவை மட்டுமே உள்ளது.

BOXABL என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த வீடானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தாமதத்தை தவிர்ப்பதற்காக எலான் மஸ்க் தொழிற்சாலை தளத்திலேயே தினமும் உறங்குவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அவரது தாயார் மே மஸ்க். எலான் மஸ்க்கின் வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் உணவு கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button