இலங்கை

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் தெரிவு; தேசிய மாநாட்டில் ஏகமனதாக முடிவு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்றது.
இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா), உபதலைவராக சுரேன்குருசாமியும், நிதிச்செயலாளராக க.விஜிந்தன், நிர்வாகச் செயலாளராக நித்தியானந்தனும், இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தலைமைக் குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button