இலங்கை

வலி.வடக்­கில் தமிழ் மக்­க­ளின் காணி­களை ஆக்­கி­ர­மித்து யாழில் இராணுவம் கட்டும் ஆஸ்பத்திரியை இடிக்கவும்!

யாழ்ப்­பா­ணம் – வசாவி­ளான் பகு­தியில் தமிழ் மக்­க­ளின் காணி­களை ஆக்­கி­ர­மித்து அமைக்­கப்­ப­டும் இராணுவ மருத்­து­வ­ம­னைக் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடித்து அகற்­று­மாறு வலிகாமம் வடக்­குப் பிர­தே­ச­ ச­பைத் தவி­சா­ளர் சுகிர்­தன் அறி­வித்­தல் அனுப்­பி­யுள்­ளார்.

வசாவி­ளான் பகு­தி­யில் தமிழ் மக்­க­ளின் காணி­களை ஆக்­கி­ர­மித்து இரா­ணுவ மருத்­து­வ­மனை அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த விட­யம் தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக்­ கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட நிலை­யி­லும், தற்­போ­து­வரை எந்­தத் தடங்­க­லும் இல்­லா­மல் கட்­டு­மா­னப் பணி­கள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதை­ய­டுத்தே, தமிழ் மக்­க­ளின் காணி­களை ஆக்­கி­ர­மித்து அமைக்­கப்­ப­டும் இரா­ணுவ மருத்­து­வ­ம­னைக் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடித்து அகற்­று­மாறு யாழ்ப்­பா­ணம் பாது­காப்­புப்

படை­க­ளின் கட்­ட­ளைத் தள­ப­திக்கு வலி.வடக்­குப் பிர­தே­ச­ச­பைத்

தவி­சா­ளர் சுகிர்­தன் அறி­வித்­தல் அனுப்­பி­யுள்­ளார்.

எதிர்­வ­ரும் புதன்­கி­ழ­மைக்­குள் இந்­தச் சட்­ட­வி­ரோ­தக் கட்­ட­டம் இடித்து அகற்­றப்­பட வேண்­டும் என்­றும்,

அல்­லது முறை­யான அனு­ம­தி­பெற்று கட்­டு­மா­னப் பணி­கள் இடம்­பெற வேண்­டும் என­வும் தவி­சா­ளர்

சுகிர்­தன் அனுப்­பி­வைத்த அறி­வித்­த­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இல்­லை­யேல் யாழ்ப்­பா­ணம் பாது­காப்­புப் படை­க­ளின் கட்­ட­ளைத் தள­ப­திக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இந்த அறி­வித்­த­லின் பிரதி சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்­கும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button