இலங்கை

மகிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது…!

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனத் தெரிந்து தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியைத் தா என மகிந்த தரப்பு கேட்டு நிற்கிறது எனத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டைத் தங்களிடம் தருமாறு மகிந்த தரப்பு கோரியுள்ளது.

நாட்டு மக்கள்

இந்த அரசாங்கம், நாட்டு மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியாக அமைந்த அரசாங்கம்.

மகிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது...! NPP எம்.பி சீற்றம் | Mahinda Faction Asks Npp For Government

அவர்கள் இனி தேர்தலில் வெல்ல முடியாது எனத் தெரிந்துகொண்டு எம்மிடம் ஆட்சியைக் கேட்கின்றார்கள்.

எங்களுடைய அரசாங்கம் ஊழல்வாதிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

மக்களின் பணத்தைச் சூறையாடியவர்கள், ஆட்சிக்காகப் பல கொலைகளைச் செய்தவர்கள் இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றனர்.

அதனால் அவர்கள் மீண்டும் மக்கள் வாக்குகளால் ஆட்சிக்கு வர முடியாது அதனால் எம்மிடம் ஆட்சி அதிகாரங்களைத் தாருங்கள் எனக் கேட்டு நிற்கின்றனர்.

மகிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது...! NPP எம்.பி சீற்றம் | Mahinda Faction Asks Npp For Government

அவர்கள் கேட்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரங்களை அவர்களிடம் கையளிக்க மாட்டாது.

மக்கள் இந்த ஆட்சியை விரும்புகின்றனர் எதிர்வரும் காலங்களிலும் தேசிய மக்கள் சக்தியே மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சியாகத் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button