பலதும் பத்தும்

இலங்கை மருத்துவருக்கு நியூசிலாந்தின் உயரிய அரச பட்டம்

நியூஸிலாந்தில் வாழும் முன்னணி இலங்கை விசேட மருத்துவ நிபுணரான கலாநிதி உதயங்கனி சமரக்கொடி, மிக உயரிய அரச கௌரவப் பட்டத்தைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்.

அண்மையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய மன்னரின் பிறந்தநாள் பாராட்டுப் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவர் நியூஸிலாந்து மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக ஒப்பிடமுடியாத சேவையை ஆற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உயரிய அரச பட்டம்

அதற்கமைய, இம்முறை இந்தப் பாராட்டுப் பட்டியலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 178 விசேட நபர்களில் இலங்கையரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சைத் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவை மற்றும் நியூஸிலாந்தில் வாழும் இலங்கை சமூகத்தின் நலனுக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் அவருக்கு நியூஸிலாந்து அங்கத்துவ கௌரவம் எனும் மிக உயரிய அரச கௌரவப் பட்டம் வழங்கப்படவுள்ளது.

சிறுநீரக நோய்

இந்த உத்தியோகபூர்வ அரச கௌரவப் பட்டமளிப்பு விழா, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நியூஸிலாந்தின் அரச மாளிகையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கை மருத்துவருக்கு நியூசிலாந்தின் உயரிய அரச பட்டம் | Sri Lankan Receives New Zealands Royal Title

இந்தப் பாராட்டுக்குரியவர்களின் ஈடு இணையற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு என்பன நியூஸிலாந்தை மேலும் வலுவான, பாதுகாப்பான மற்றும் சிறந்த நாடாக மாற்றுவதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தின் வைகாடோ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணராகவும், குழந்தைகளுக்கான சிறுநீரக நோய் விசேட மருத்துவராகவும் கலாநிதி உதயங்கனி சமரக்கொடி சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button