இலங்கை

கோட்டாபயவின் பெயரால் பதறும் நாமல்; ஜூலை 31இல் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது ஆட்சிக்காலப் புள்ளிகளை மையப்படுத்தி தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தீவிரமாக முன்னெடுத்து வரும் விசாரணைகளினால், நாமம் ராஜபக்ச மற்றும் மொட்டுக்கட்சி (SLPP) தரப்பினர் மத்தியில் பதற்றம் நிலவி வருகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத்துறை பிரதானி சுரேஷ் சலே, சிஐடி காவலில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவர் தனது உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மத்தியிலும், கடந்த கால அரசியல் தலைமைகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் இரகசிய நகர்வுகள் குறித்து வாக்குமூலங்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த பல முக்கிய சம்பவங்கள் மற்றும் நிதி விவகாரங்கள் இதில் தொடர்புபடுவதால், அது நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்குப் பெரும் அரசியல் மற்றும் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button