கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்

கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) 12ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது
யுஎஸ்எஸ் டல்ஸா, யுஎஸ்எஸ் சார்ள்ஸ்டன், யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா ஆகியகப்பல்களைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரும் அமெரிக்க கடற்படையின் நான்காவது லிட்டோரல் வகை போர்க்கப்பலின் வருகையினை இவ்விஜயம் குறிப்பதுடன்இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் கடல்சார் பங்காளர்கள் தமக்கிடையே தொடர்ச்சியானஊடாட்டங்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது
கொமாண்டர் ஜேம்ஸ் மிக்லொஃப்லினின் தலைமையிலான யுஎஸ்எஸ் கன்பெரா, எரிபொருள் நிரப்புவதற்காகவும், தேவையான ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒருகுறுகிய காலம் கொழும்பில் தரித்திருக்கும்.
![]()