கனடா அமெரிக்க எல்லையிலுள்ள நூலகம்

கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்துவதற்காக, கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டது நூலகம் ஒன்று.
ஆனால், ட்ரம்ப் கனேடியர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் அதற்கு இடையூறை ஏற்படுத்த, கனடா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
கனடா அமெரிக்க எல்லையிலுள்ள நூலகம்
1904ஆம் ஆண்டு, கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கனடா அமெரிக்க எல்லையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது.

கனேடியர்கள் அந்த நூலகத்துக்குச் செல்லவேண்டுமானால், எல்லை கடந்து அமெரிக்காவிலுள்ள Vermont மாகாணத்துக்குச் சென்றுதான் அந்த நூலகத்துக்குள் நுழையமுடியும்.
அவ்வகையில், கனேடியர்கள் அந்த நூலகத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதித்தார் ட்ரம்ப். ஆக, அந்த நூலகம் கட்டப்பட்டதன் நோக்கமே ட்ரம்பால் அடிபட்டுப் போய்விட்டது.
கனடா எடுத்துள்ள நடவடிக்கை
இந்நிலையில், அந்த நூலகம் தொடர்பில் கனடா அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. ஆம், கனேடியர்கள் அந்த நூலகத்தைப் எளிதாக பயன்படுத்தும் வகையில், கனடா பகுதியில், அதாவது, கியூபெக்கில் அந்த நூலகத்துக்கு ஒரு நுழைவாயிலை அமைத்துள்ளது கனடா அரசு!

நீங்கள் அந்த நூலகத்தைப் பார்த்தால், அமெரிக்கா கனடாவுக்கு இடையிலான சர்வதேச எல்லை, தரையில் ஒரு கருப்பு நிற டேப் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

அதாவது, அந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் அமெரிக்கா, இந்தப் பக்கம் கனடா! ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த நுழைவாயிலை அமைப்பதற்காக மிகப் பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது.
ஆம், 500,000 டொலர்கள் செலவில் அந்த நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது!
![]()