பலதும் பத்தும்

சமைக்கும் போது இறாலின் கருப்பு நரம்பை ஏன் நீக்க வேண்டும்?

கடல் உணவுகளில் இறால் பலருக்கும் பிடிக்கும். இந்த இறாலின் முதுகில் இருக்கும் கருப்பு நரம்பை எடுக்காமல் சமைத்தால் அதனால் வரும் ஆபத்துக்கள் பற்றி அறிந்துகொள்ளலாம்.

இறால்

கடல் உணவு பிரியர்களுக்கு இறால் என்று சொன்னாலே நாவில் உமிழ்நீர் வடியும்.

ஆனால் இறால் சமைக்க முன்னர் நாம் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இறாலின் பின்புறத்தில் ஒரு அடர் நிற கோடு போல இருக்கும் கருப்பு நரம்மை அகற்றுவது அவசயிம். 

இதை பற்றி நிபுணர் விளக்கத்துடன் பார்க்கலாம்.

சமைக்கும் போது இறாலின் கருப்பு நரம்பை ஏன் நீக்க வேண்டும்? | Problem Don T Remove The Black Vein From Prawn

இறால் கழுவும் முறை

முதலில் இறாலின் தலை மற்றும் கால்களை அகற்றவும். பின்னர் வாலை அப்படியே விட்டுவிட்டு ஓட்டை அகற்றவும்.

கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி, இறாலின் பின்புறத்தில் ஒரு ஆழமற்ற, லேசான வெட்டு போடுங்கள்.

இப்போது, கத்தியின் நுனி அல்லது ஒரு டூத்பிக் பயன்படுத்தி, கருப்பு நரம்புகளை மெதுவாக மேலே இழுக்கவும். நரம்புகளை அகற்றிய பிறகு மீதமுள்ள அழுக்குகளை அகற்ற இறாலை குளிர்ந்த நீரில் நன்கு அலசவும்.

சமைக்கும் போது இறாலின் கருப்பு நரம்பை ஏன் நீக்க வேண்டும்? | Problem Don T Remove The Black Vein From Prawn

கருப்பு நரம்பு நீக்காவிட்டால் ஏற்படும் தீமைகள்

 

இறால் பொதுவாக குறைந்த கொழுப்புள்ள கடல் உணவாகும்.

அதில் உள்ள கொழுப்பு மிகவும் ஆரோக்கியமானது. இறால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.

சமைக்கும் போது இறாலின் கருப்பு நரம்பை ஏன் நீக்க வேண்டும்? | Problem Don T Remove The Black Vein From Prawn

 

இறாலைச் சுத்தம் செய்யும்போது அதன் நரம்பையும் அகற்ற வேண்டும் என்று பல சமையல் கலைஞர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதற்கு காரணம் அந்த கருப்பு நரம்பை அகற்றினால் தான் இறாலின் சுவை மேம்படும் எனறு கூறுகிறன்றனர்.

சமைக்கும் போது இறாலின் கருப்பு நரம்பை ஏன் நீக்க வேண்டும்? | Problem Don T Remove The Black Vein From Prawn

,இந்த கருப்பு நரம்பு நீக்காவிட்டால் பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்களுக்கு இது வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்த கருப்பு நரம்பு இறாலின் செரிமான அமைப்பின் ஒரு பகுதியாகும். அதில் செரிக்கப்படாத உணவு, அழுக்கு, மணல் துகள்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் இருக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button