பலதும் பத்தும்

லண்டன் Ilford இல் பதறவைத்த சம்பவம்; அடுக்குமாடி கட்டிடத்தில் தொங்கிய சிறுமி

லண்டனின் இல்ஃபோர்ட் (Ilford) பகுதியில் நெஞ்சை அதிரவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தள ஜன்னல் வழியாக வெளியே வந்த சிறுமி ஒருவர், நிலைதடுமாறி ஆபத்தான நிலையில் கீழே தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் பதறினர்.

சிறுமி எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடக்கூடும் என்ற அச்சம் நிலவிய சூழலில், அங்கு பணியில் இருந்த காவலர் மற்றும் துணிச்சலான இளைஞர் ஒருவர் இணைந்து, அந்தச் சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டனர்.

தக்க நேரத்தில் செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞருக்கும், காவலருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட தருணம் அங்கிருந்தவர்களை நிம்மதியடையச் செய்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button