பலதும் பத்தும்

​உலகளவில் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்ட்டா! – தவித்து வரும் பயனர்கள்

பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்னும் சில சமூக ஊடகத் தளங்கள் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளன.

இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

பலர் தங்களது பேஸ்புக் கணக்குகளில் இருந்து தானாகவே வெளியேற்றப்பட்டதுடன், மீண்டும் உள்நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இணைய சேவை கோளாறுகளை கண்காணிக்கும் தளங்களில் ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், உள்நுழைவு தோல்வி, கணக்குகளை அணுக முடியாமை மற்றும் சில அம்சங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

பயனர்களின் தகவல்களின்படி, இந்த பாதிப்பு பேஸ்புக்கின் மொபைல் செயலி மற்றும் இணையப் பதிப்பு ஆகிய இரண்டையும் பாதித்துள்ளது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்த கோளாறு உலகளாவிய அளவில் ஏற்பட்டதா அல்லது குறிப்பிட்ட சில பிராந்தியங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button