இலங்கை

சமூக நீதியை அடமானம் வைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!

தேசியமக்கள் சக்தி அரசாங்கம் வாக்கு வங்கிகளுக்காக சமூக நிதியை அடகு வைக்கின்றார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாத்துரை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பயங்காவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என பொய்யான வாக்குறுதி கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியமக்கள் சக்தி அரசாங்கம் பயங்காவாத தடைச்சட்டத்தை நீக்காமல் அதனை நடைமுறைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கத்திற்கு எப்படி அரசியல் முறைமையை கொண்டு செல்வது என்ற திட்டமே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button