இலங்கை

நீதிமன்ற விவகாரத்தில் நடு நடுங்கும் மகிந்த தரப்பு!; தொடரும் திகில் நகர்வுகள்

கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகின்றன.

இதுவே மகிந்த ராஜபக்ச மற்றும் மொட்டுக்கட்சி (SLPP) தரப்பினருக்கு பெரும் சட்ட நெருக்கடியையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது என பலர் அரசியல் தரப்பில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக, ரூபாய் 29 மில்லியனுக்கும் அதிக பொதுப் பணத்தைப் பயன்படுத்தி டி-ஷர்ட்டுகள் மற்றும் நாட்காட்டிகள் அச்சிட்ட வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்க சட்ட மா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள முடிவு, ராஜபக்ச குடும்பத்தினரை நேரடியாக சட்டக் கூண்டில் நிறுத்தியுள்ளது எனலாம்.

இவ்வாறிருக்கையில், சுரேஸ் சலே விவகாரம் பசில் ராஜபக்ச விவகாரம் போன்றவற்றால் தென்னிலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button