பலதும் பத்தும்

திருமண வயசு வந்துட்டா பாலியல் உறவு சட்ட விரோதம் இல்லை!

உலகமெங்கும் திருமணம் மீறிய உறவு என்பது பலரிடமும் காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்வது, திருமணமான ஆண் வேறொரு இளம் பெண்ணுடன் உறவை வைத்துக்கொள்வது, திருமணமான ஆண், திருமணமான மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது, அது தொடர்பாக வன்முறைகள் நேர்வது, பொலிஸ் நிலையத்தில் புகாரளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் சம்மதத்தோடு அவருடன் ஒரு ஆண் உறவு கொள்வது என்பது கள்ளத்தொடர்பு என சொல்ல முடியாது என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது சமூகவலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான், திருமண வயதை எட்டிய இருவர் சுய விருப்பத்தில் பாலியல் உறவு கொள்வது சட்டவிரோதம் கிடையாது.. அது அவர்களின் நன்னடத்தையை தீர்மானிக்காது என உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. தெலுங்கானாவில் ஒரு வாலிபர் ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக சொல்லி பாலியல் உறவு கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்யவில்லை.

இதையடுத்து திருமணம் செய்ததாக கூறி தன்னை ஏமாற்றி அந்த வாலிபர் பாலியல் உறவில் இருந்ததாக அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பொலிஸ் பணிக்கான தேர்வில் அந்த வாலிபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அந்த வாலிபர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் இந்த அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button