உலகம்

எண்ணெய் கப்பல் மீதான அமெரிக்க தாக்குதல்; காணாமல்போன 3 மாலுமிகளும் உயிரிழப்பு!

ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போன மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாலுமிகள் காணாமல் போயினர்.

குறித்த கப்பல் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதால் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்ககா கூறியுள்ளது.

ஈரானுக்கு எதிரான தனது தொடர்ச்சியான கடல் முற்றுகையின் ஒரு பகுதியாக, ஜூன் 9 அன்று இரவு செட்டெபெல்லோ என்ற கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு பின்னர் உறுதிப்படுத்தியது.

இந்தியா இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், கப்பலில் இருந்த இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தது.

தாக்குதல் நடந்த நேரத்தில் கப்பலில் 24 இந்தியப் பணியாளர்கள் இருந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலின் பின்னர், 21 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button