உலகம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவத்தில் மீண்டும் விசாரணையை சிபிஐ தொடங்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் ஆய்வாளர் உட்பட 10 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஒரு சில பொலிஸார் மட்டுமே ஆஜராகி உள்ளனர்.

பொலிஸ் ஆய்வாளர் சையது அலி மற்றும் ஒரு சில பொலிஸார் மட்டும் தற்போது விசாரணைக்கு ஆஜராகினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button