பலதும் பத்தும்

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?

வெயில் காலத்தில் கரும்பு ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை வெயில்

வெயில் காலம் வந்துவிட்டாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கஷ்டப்படுகின்றனர். உடலில் வெப்பம் அதிகரித்துவிடுவதுடன், நீர்ச்சத்தும் குறைந்து விடுகின்றது.

ஆதலால் வெயில் காலங்களில் எலுமிச்சை, தர்பூசணி, கரும்பு இவற்றினை ஜுஸாக எடுத்துக் கொள்ளலாம். இதில் எலுமிச்சை மற்றும் கரும்பு ஜுஸ் விலை மலிவாகவே கிடைக்கின்றது.

கரும்பு மற்றும் எலுமிச்சை ஜுஸில் இஞ்சி சேர்த்து பருகினால் அதிகமான நன்மையினைப் பெற முடியும். தற்போது கரும்புச்சாறு குடிப்பதால் என்னென்ன மருத்துவ பலன்களை பெறமுடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கரும்பு சாறு குடிப்பதால் என்ன பயன்?

கரும்புச்சாறில் இயற்கையான சர்க்கரை காணப்படுவதால் இவை உடம்பில் உள்ள சோர்வை நீக்கி ஆற்றலை கொடுக்கின்றது. மேலும் நீர்ச்சத்து வீணாகமல் இருப்பதற்கு கோடை காலத்தில் கரும்புச்சாறு சிறந்த பானமாக இருக்கின்றது.

கரும்புச்சாறு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்தவும், கல்லீரலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றது.

மேலும் செரிமான சுரப்பை மேம்படுத்தி, செரிமான கோளாறுகளை சரிசெய்வதுடன், இதிலுள்ள பொட்டாசியம் சிறுநீரக செயல்பாட்டை உறுதி செய்வதுடன், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றையும் குறைக்கின்றது.

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்.. | What Benefits You Get By Drinking Sugarcane Juice

கரும்பு சாறில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது. அதோடு சருமத்தை இளமையாக வைக்கவும் உதவுகிறது. அதேநேரம் நீரிழிவு நோயாளிகள் கரும்பு சாற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது..

 கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்.. | What Benefits You Get By Drinking Sugarcane Juice

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button