செம்மணிக்குச் சாட்சியாளர்கள் இருக்கிறார்களா?

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் எந்த விடயத்தையும் மறைப்பதற்கான தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், உண்மைகளை வெளிக்கொணர்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செம்மணி மனித புதைகுழி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அங்கு இதுவரையில் 565 எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்வு நடக்கும் போது சகல விடயங்களும் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்படும். இதன்படி நீதிமன்ற உத்தரவுக்கமைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் நடக்கும். இதன் சாட்சியாளர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்தில் எதனையும் மறைக்க வேண்டிய விடயம் எங்களுக்கு கிடையாது. இது தொடர்பில் விசேட நிபுணர்கள், சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டதாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் உண்மைகளை சமூகத்திற்கு கொண்டு செல்லவே நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
![]()