பலதும் பத்தும்

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button