இந்தியா

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இன்று வாக்குபதிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23(இன்று) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் பொலிசார் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதில் 5938 வாக்குசாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது, 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் மிக அமைதியான முறையில் நடைபெறுவதற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர், இவர்கள் தவிர ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர், ஓய்வு பெற்ற வன காவலர் என 20,000 பேர் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர், சிசிடிவி கமெராக்கள் மூலம் வாக்குபதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று வரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *