உலகம்
காசாவில் இன்னும் ஓயவில்லை மரண ஓலம்: இஸ்ரேல் தாக்குதலில் 73,391 பேர் பலி

காசா முனையில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் “போர்நிறுத்தம்” அமுலுக்கு வந்ததில் இருந்து, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,262 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4,168 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், 2023 அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரில் இதுவரை குறைந்தது 73,391 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,74,280 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
![]()