பலதும் பத்தும்

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நடிகரும் தவெக தலைவருமானவிஜய் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு விவரத்தில் தன்னுடைய கார் கலெக்ஷன்கள் குறித்த விரங்களை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் பெருதும் கவனம் பெற்று வருகின்றது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் முதல் சாமானியர்கள் பயன்படுத்தும் எக்ஸல் சூப்பர் வாகனம் வரை விஜய்யின் கார் பட்டியலை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்துள்ளனர்.

நடிகர் விஜய் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இவரின் சினிமா பயணத்தில் ஏராளமான மாஸ் படங்களை கொடுத்துள்ளார். இவரின் படம் திரைக்கு வருகின்றது என்றால் விஜய் ரசிகர்களுக்கு திருவிழா தான்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று அரசியலில் இறங்கிவிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும் விஜயை சுற்றி தனிப்பட்ட பிரச்சினைகளும் ஏராளமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு விவரத்தில் தன்னுடைய கார் கலெக்ஷன்கள் குறித்த விரங்களை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

கார் லெக்‌ஷன் பற்றிய விபரம்

1. பிஎம்டபிள்யூ i7 (BMW i7) : விஜய்யின் வசம் உள்ள வாகனங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது இந்த BMW i7 எலக்ட்ரிக் கார். 2024-ல் வாங்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.2.00 கோடி என குறிப்பிடப்படுகின்றது.

அதன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு முழுமையான மின்சார சொகுசு கார் ஆகும். அதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 600 கி.மீ வரை பயணிக்கலாம். சினிமா தியேட்டர் போன்ற 31.3 இன்ச் பின்புறத் திரை இதன் தனிச்சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகின்றது.

2. டொயோட்டா லெக்ஸஸ் 350 (Toyota Lexus 350) இந்த கார் விஜய் அடிக்கடி பயணங்களுக்குப் பயன்படுத்து என குறிப்பிடப்படுகின்றது. இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.3.01 கோடியாகும்.

அதன் தனிச்சிறப்பு என்வென்றால், ஜப்பானியத் தொழில்நுட்பத்தில் உருவான இந்த கார், உலகிலேயே மிகவும் மென்மையான பயண அனுபவத்தைத் தருவதில் முதன்மையானது என அறியப்படுகின்றது.

3. டொயோட்டா வெல்பையர் (Toyota Vellfire) : சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விருப்பமான ‘கேரவன்’ போன்ற சொகுசு கார் இது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.63 கோடி ஆகும்.

இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் இருக்கைகளை விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் போல மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்களின் போது களைப்பு தெரியாமல் இருக்க இதில் மசாஜ் வசதி கொண்ட இருக்கைகள் காணப்படுகின்றமை இந்த காரின் தனிச்சிறப்பாகும்.

4 . பிஎம்டபிள்யூ 530 (BMW 530) : கடந்த 2020-ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த காரின் மதிப்பு சுமார் ₹80.54 லட்சம் ஆகும். இந்த கார் தான் விஜயின் நீண்ட கால விருப்பமான கார் என குறிப்பிடப்படகின்றது.

5. மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) : அதிநவீன கார்கள் இருந்தாலும், விஜய் தனது பெயரில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரையும் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ₹5.35 லட்சம் ஆகும். அவசரப் பயன்பாட்டிற்காக இதைப் பயன்படுத்துவாராம்.

6. டிவிஎஸ் XL சூப்பர்: விஜய்யிடம் இருக்கும் என யாரும் எதிர்பார்திருக்காத ஒரு வாகனம் இந்த XL சூப்பர். இந்த இருசக்கர வாகனமும் தன்னிடம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் விஜய். நம்ம ஊரு வண்டி என செல்லமாக அழைக்கப்படும் இந்த டிவிஎஸ் மொபெட் வெறும் ரூ.67,400/- மட்டுமே. விஜய்யின் சொத்து பட்டியலில் பலரையும் வியக்க வைத்தது அவரிடம் உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *