கவிதைகள்
“ஒரு மழை நாளில்” … கவிதை … முத்தழகு கவியரசன்…. திருநெல்வேலி.


முத்தழகு கவியரசன் திருநெல்வேலி.
வெயிலில் வியர்த்து,
கால்கள் தேய்ந்த ஒரு மாலை.
பேருந்து நிலையத்தின்
தகரக் கூரைக்கு கீழ் ஒதுங்கி நின்றேன்.
அச்சமயத்தில் புழுக்கத்தை புறம் தள்ளி
மேகம் கசிந்து குளிர வைத்தது மழை.
ஒவ்வொரு துளியும் முத்தமிட்டு
கேள்வி கேட்டது: “எங்கே ஓடுகிறாய்?” என்று.
சுற்றிலும் கண்கள் பரபரத்தது.
எல்லோரும் அலைகிறார்கள்.
குடைக்குள் ஒரு கூட்டம்.
பஸ்ஸுக்குள் ஒரு கூட்டம்.
வாழ்க்கைக்குள் ஒரு கூட்டம்.
பணத்துக்காக அலைகிறோம்,
பாசத்துக்காக அலைகிறோம்,
ஒரு பிடி நிம்மதிக்காக அலைகிறோம்.
அலைதல்
ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது.
தெரு நாயொன்று மழைக்கு பயந்து
கடையின் படிக்கட்டில் உடலைக் குறுக்கி,
சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டது.
மரத்தில் ஒரு பறவை.
சிறகை மடக்கி, தலையை உள்ளிழுத்து,
மழை படாமல் இலைக்குள் பதுங்கியது.
உயிர்கள் எல்லாம்.
![]()