பலதும் பத்தும்

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்!

பொதுவாகவே நாம் அனைவரும் சுத்தமாக தேனை ஒரு முறையாவது சுவைத்திருப்போம். தேனின் சுவைரள அறியாதவர்கள் கூட அதன் நிறத்தை நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

தேனீகள் பெரும்பாலும் தேனை சேகரித்தால் அந்த தேன் தங்க நிறத்தில் இருக்கும் அல்லது தங்கநிறம் கலந்த பிரவுன் நிறத்தில் இருக்கும்.

ஆனால் தேனீக்களால் நீல நிற தேனை உருவாக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் சில இடங்களில் தேனீகள் நில நிற தேன்களை சேகரித்துள்ளன. இது எவ்வாறு சாத்தியம்? அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவானவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்ட மற்றும் கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருளாக இருப்பது தான் இயற்கை தேன்.

தேன் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு வைட்டமின் கள் ஏ, பி, சி, கால்சிம், இரும்பு சத்து, ஐயோடின் போன்ற சத்துக்களை நம் உடலுக்கு அளித்து உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கின்றது.

இதில், விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.

நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும்.

ரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதில் இயற்கை தேன் ஆற்றல் காட்டுகின்றது. தேனின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதன் நிறம் பொதுவாக தங்க நிறத்தில் இருக்கும் அல்லது தங்கநிறம் கலந்த பிரவுன் நிறத்தில் இருக்கும்.

ஆனால் நீல நிறத்திலும் தேன் காணப்படுகின்றது. பற்றி பெரும்பாலானலர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, முதல் முதலில் நீல நிற தேன் பிரான்சில் தான் கண்டறியப்பட்டது.

2012-ஆம் ஆண்டில், பிரான்சின் ரிபோவில் நகரில் உள்ள தேனீ வளர்ப்பாளர்கள், தங்கள் தேனீக்கள் வழக்கமான தங்க நிறத் தேனுக்குப் பதிலாக, பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத் தேனை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்தனர்.

அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது, அருகிலுள்ள ஒரு எம்&எம்ஸ் சாக்லேட் தொழிற்சாலையின் கழிவுகளைப் பதப்படுத்தும் உயிரிவாயு ஆலையிலிருந்து வெளியேறிய சர்க்கரைக் கழிவுகளைத் தேனீக்கள் சாப்பிட்டமையே இந்த அசாதாரண நிகழ்வுக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் கரோலினா பகுதிகளில், சவர்வுட் மரங்களின் மலர்களில் இருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனும் இவ்வாறு நீல நிறத்தில் இருக்கும்.

அதற்கான காரணம் அந்த சவர்வுட் மரங்கள் அலுமினியம் அதிகம் உள்ள மண்ணில் வளரும் என்பதால், அதில் அருந்து பெறப்பட்ட தேனை தேனீக்கள் தேனாக மாற்றும் செயல்பாட்டின் போது ஏற்படும் அமிலத்தன்மையால் நீல நிறமாக மாறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button