தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின்; உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா?

பொதுவாகவே தற்காலத்தில் ஒயின் குடிப்பது சாதாரண விடயமாக மாறிவிட்டது, அதுவும் ரெட் ஒயினை பலரும் விரும்பி பருகுகின்றார்கள்.
குறிப்பாக சினிமா பிரபலங்கள் தங்களின் இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் சருமத்தை பளப்பளப்பாக வைத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் என பல்வேறு காரணங்களுக்காக ரெட் ஒயின் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றார்கள்.
ரெட் ஒயினை தினசரி எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ரெட் ஒயினில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் என்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.
ஒரு பாட்டில் ரெட் ஒயினில் 12-15 சதவீதம் ஆல்கஹால், 125 கலோரிகள், 0 கொலஸ்ட்ரால் மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க துணைப்புரிவதாலேயே தினசரி குறிப்பிட்ட அளவில் ரெட் ஒயின் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.
ரெட் ஒயினை அளவாக குடிப்பதால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
குறிப்பாக தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இளமை தக்கவைக்கப்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
திராட்சைகளில் இயற்கையாகவே ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோஅந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்து காணப்படுகின்றன.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.இதை குடித்தபின்னர் சுமார் 24 மணிநேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதிலுள்ள ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது.
மேலும் இதிலுள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
இதன்மூலமாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய ரெட் ஒயின் பெரிதும் துணைப்புரிகின்றது.
Dementia மற்றும் Alzheimer’s போன்ற நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது, விர்ஜினியா பல்கலைகழகத்தின் கூற்றுப்படி, புற்றுநோய் செல்களை விரைந்து அழிப்பதால் மார்பக புற்றுநோய் உட்பட பலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற பொருள் அதிக அளவில் காணப்படுவதால், தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள், அளவோடு ரெட் ஒயினை குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் அதே வேளை, அதனை அளவுக்கு அதிகமான பயன்படுத்துவது ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுதும். ஏற்கனவே வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்காக மருத்துக்களை பாவிப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
ரெட் ஒயினின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவேண்டியது அவசியம்.
![]()