பலதும் பத்தும்

வானில் ஓர் இயற்கை அதிசயம்; இன்று உதயமாகிறது ‘பிங்க் மூன்’

வசந்த காலத்தின் வருகையை பறைசாற்றும் ‘பிங்க் மூன்’ (Pink Moon) எனப்படும் முழு நிலவு இன்று இரவு வானில் பிரகாசிக்கவுள்ளது.

பழங்குடியின மக்கள் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒவ்வொரு மாத நிலவுக்கும் ஒரு பெயரைச் சூட்டுவது வழக்கம்.

அமெரிக்காவின் புல்வெளிகளில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் ‘பிளோக்ஸ்’ (Phlox) என்ற இளஞ்சிவப்பு நிறக் காட்டுப்பூக்களின் நினைவாகவே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று இரவு முழுவதும் பிரகாசமாகத் தெரியும் இந்த நிலவு, இன்று (02) அதிகாலை வரை நீடிக்கும்.

இதனைப் பார்ப்பதற்கு எந்தவித விசேட உபகரணங்களும் தேவையில்லை; வெறும் கண்களாலேயே ரசிக்கலாம். வளிமண்டலத்தில் தூசு அல்லது புகை மூட்டம் அதிகமாக இருந்தால், நிலவு லேசான இளஞ்சிவப்புச் சாயலில் தெரிவதற்கு வாய்ப்பு உண்டு.

பல்வேறு கலாச்சாரங்களில் இந்த ஏப்ரல் மாத முழு நிலவு முட்டை நிலவு,புற்கள் முளைக்கும் நிலவு ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இயற்கை அன்னை மீண்டும் புத்துயிர் பெறுவதை உணர்த்தும் இந்த ‘பிங்க் மூன்’, ஏப்ரல் மாதத்திற்கு ஒரு நேர்மறையான தொடக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *