முச்சந்தி
உக்ரேன் போர்: சீனா இந்தியா மீது குற்றச்சாட்டு!… ரஷ்யா ‘காகிதப் புலி’ என டிரம்ப் கடும் கண்டனம்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

அலாஸ்காவில் புட்டினுக்கு செங்கம்பள வரவேற்புடன், மிக நெருக்கமாக டிரம்ப் சந்தித்தன் மூலம், சமாதான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் தற்போது ஐரோப்பிய வான் எல்லைகளில் பறக்கும் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த டிரம்ப் அறிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது)
இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட ஏழு போர்களைத் தீர்த்து வைத்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகப் பெருமையாக பேசி வருகிறார். கடந்த ஏழு மாதங்களில், உலகின் ஏழு முடிவடையாத போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன் என்று டிரம்ப் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்.
ரஷ்யப் படை காகிதப் புலி?
ஐக்கிய நாட்டுச் சபையின் 80வது பொதுக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரேனிய அதிபர் விலொடிமிர் ஜெலன்ஸ்கியை செப்டம்பர் 23இல்சந்தித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு போரில் இழந்த பகுதிகள் முழுவதையும் உக்ரேன் மீட்டெடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளமை, ரஷ்யாவுடனான போர் குறித்த அவரது நிலைப்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
ரஷ்யாவிடம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்கும் வலிமை உக்ரைனுக்கு இருப்பதாக கூறியமை, முன்னர் உக்ரைன் சில சலுகைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பிலிருந்து விலகி, தனது நிலைப்பாட்டை மாற்றியதைக் குறிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் ஆதரவுடன் உக்ரைன் தனது முன்னைய எல்லைகளை போராடி வெல்ல முடியும் என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். உண்மையிலே
ஒரு வாரத்திற்குள் வென்றிருக்க வேண்டிய போரில், ரஷ்யா மூன்றரை ஆண்டுகளாக குறிக்கோள் இல்லாமல் சண்டையிடுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ரஷ்யாவை ஒரு “காகிதப் புலி” (Paper Tiger) போல தோற்றமளிக்கச் செய்துள்ளது என்றும் அவர் காட்டமாக சாடியுள்ளார்.
இதேவேளை உக்ரைனின் எதிர்த்துப் போராடும் திறன், தங்கள் நிலத்தை மீட்டெடுக்கட்டும் என்றும், அமெரிக்கா தொடர்ந்து நேட்டோ மூலம் ஆயுதங்களை வழங்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் மாஸ்கோ மீதான பொருளாதார அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். மாஸ்கோ மற்றும் ரஷ்யா முழுவதும் உள்ள அனைத்து பெரிய நகரங்கள், மாவட்டங்களில் வாழும் மக்கள், இப்போரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் அந்த நாட்டின் மீது மிக வலுவான முறையில் அமெரிக்கா வரி விதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் போரில் இலட்சக்கணக்கான உயிர்களின் ரத்தம் சிந்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரேன் போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் அனைத்து ஐரோப்பிய
நாடுகளும் ரஷ்யா மீதான பொருளாதார தடை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இல்லாவிடின் அமெரிக்கா நிச்சயம் தலையிடும் என்று கருத்து தெரிவித்தார்.
நாடுகளும் ரஷ்யா மீதான பொருளாதார தடை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இல்லாவிடின் அமெரிக்கா நிச்சயம் தலையிடும் என்று கருத்து தெரிவித்தார்.சீனாவும் இந்தியாவும் காரணம்:
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் மோதலுக்கு சீனாவும் இந்தியாவும் காரணம் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். ரஷ்யாவின் எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் நடந்து கொண்டிருக்கும் போருக்கு முதன்மையான நிதியுதவி அளிப்பவர்களாக இருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். ஆனால் நோட்டாவின் ராணுவ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை வாங்குவதை இதுவரை குறைக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டவில்லை.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வந்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க விதித்தது. தற்பொழுது அதை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது .இந்த நடைமுறை கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியிலிருந்து அமலில் இருந்து வருகிறது.
ஏழு போர்களை தீர்த்த டிரம்ப்?
இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட ஏழு போர்களைத் தீர்த்து வைத்ததை அமெரிக்க டிரம்ப் வெளிப்படையாக கூறி வருகிறார். கடந்த ஏழு மாதங்களில், ஏழு முடிவடையாத போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன் என்று டிரம்ப் கூறி உள்ளார்.
உலகில் பல முடிவடையாத போர் என்று கூறப்பட்ட நிலையில், சில போர்கள் 31 ஆண்டுகள் நீடித்தன, ஒன்று 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன். இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கம்போடியா மற்றும் தாய்லாந்து, சேர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளை அவர் தனது கண்காணிப்பின் கீழ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போரை நிறுத்தியதாக கூறியுள்ளார்.
இந்த போர் நிறுத்த நடவடிக்கைகளை ஐ. நா செய்யவுல்லை . இது தொடர்பாக ஐ. நா வெறும் கடிதத்தை மட்டுமே எழுதி இருந்தது. நான் நிறுத்திய ஏழு போர்களை போல, ஜனாதிபதி புட்டினுடனான எனது உறவின் காரணமாக இது மிகவும் எளிதானதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது மிகவும் கடினமாக தற்போது உள்ளது.ரஷ்ய விமானங்களை சுட உத்தரவு:
நேட்டோ கூட்டமைப்பு (வடஅட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு) நாடுகளின் ஆகாயவெளியின் எல்லைகளை மீறும் ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துமாறும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் நேட்டோ வான் பாதுகாப்பு ஆயுதங்களை வைத்து உக்ரைன் வெற்றிக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அலாஸ்காவில் புட்டினை டிரம்ப் சந்தித்த பிறகு, உக்ரைன் போரில் சமாதான தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பதற்றம் சூழ்ந்த நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற நம்பத்தகுந்த பங்காளிதானா என்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த பெரிய மாற்றம் காரணமாக உக்ரைன் போரில் கடும் பின்னடைவை ரஷ்யா சந்திக்கும் என உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதற்கு முன்பாக, அமைதி ஏற்பட வேண்டுமென்றால், உக்ரேன் அதன் பகுதிகளை இழக்கத் தயாராக வேண்டும் என டிரம்ப் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
வான்பரப்பில் ரஷ்யா அத்துமீறல்
ஐரோப்பிய வான்பரப்பில் ரஷ்யா அத்துமீறல் என நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே ஜோர்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்தது. தற்போது எஸ்டோனியாவுக்குள் ரஷ்ய போர் விமான நுழைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
கடந்த வாரம் போலந்தின் எல்லையில் இரண்டு ரஷ்ய போர் விமானங்கள், பெட்ரோபால்டிக் நிறுவனத்திற்குச் சொந்தமான பால்டிக் கடல் எண்ணெய் தளத்தின் மீது தாழ்வான உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது.
பால்டிக் நாடான எஸ்டோனியா, ரஷ்யாவின் பக்கத்து நாடாகும். உக்ரைனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட, ஏன் இந்த நாட்டின் எல்லைக்குள் ரஷ்ய ராணுவ விமானங்கள் நுழைந்தன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
எனவேதான் போலாந்து, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகள் மூலம் நேட்டோ வான்
பாதுகாப்புக்கு தயாராகி வருகிறது. ரஷ்ய விமானங்களுக்கு எதிராக நேட்டோ எடுத்த நடவடிக்கையை அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே பாராட்டியிருக்கிறார்.
பாதுகாப்புக்கு தயாராகி வருகிறது. ரஷ்ய விமானங்களுக்கு எதிராக நேட்டோ எடுத்த நடவடிக்கையை அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே பாராட்டியிருக்கிறார்.மேலும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் ஆகாயவெளியின் எல்லைகளை மீறும் ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துமாறும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது ரஷ்யாவிற்கு எதிரான கடும் போக்கை டிரம்ப் எடுத்துள்ளார். உக்ரைன் மீதான புதிய அமெரிக்க ஆதரவு போரின் நிலையை இலகுவாக மாற்றுமா என்பது கேள்விக்குறியே.
![]()