முச்சந்தி
வடகிழக்கில் தமிழர் வாழ்விடங்களில் இராணுவமயமற்ற மக்கள் நிர்வாகம் வேண்டும் ! -ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் வேண்டுகோள்:

முன்னாள் இராணுவத்தினருக்கு ஆளுநர், செயலாளர், தூதர் பொறுப்புகள் கூடாது. இராணுவம் ஆக்கிரமித்துள்ள இடங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐநாவில் சிட்னியில் வசிக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சாரதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் 60 வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள கனடாவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சாரதா உரையாற்றினார்.
இலங்கையில் போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் கடந்தும், இராணுவமயமாக்கல் தமிழர் வாழ்விடங்களில் இன்னும் பொதுமக்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.
இராணுவ முகாம்கள் அமைக்க ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்கள் கணிசமான அளவில் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இதனால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய வீடுகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் திரும்ப முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். இது ஒரு இனப்படுகொலையின் வடிவம் என்றே பார்க்கப்படுகிறது.
சீருடை அணிந்த மற்றும் முன்னாள் சீருடை அதிகாரிகளும் உள்ளூர் நிர்வாகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். முன்பு, மேஜர் ஜெனரல் சந்திரசிறி வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்; ரியர் அட்மிரல் மோகன் விஜேவிக்ரம பல ஆண்டுகள் கிழக்கு மாகாண ஆளுநராகப் பணியாற்றினார்.
இந்த முறைமையானது, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு மூத்த அரசுப் பொறுப்புகள் மற்றும் தூதரகப் பதவிகள் வழங்கி பாராட்டுப் பத்திரம் அளிப்பதாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் தாக்குதலின்போது பேரழிவு ஏற்படுத்தியதாக வெளிப்படையாகப் பெருமைடித்த போர்க்குற்றவாளி, முன்னாள் விங் கமாண்டர் சம்பத் துயகொந்தா – வர் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயகாவால் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தூதர்களாக அனுப்பப்பட்டனர். இத்தகைய நியமனங்கள் அவர்களின் பெயர்ப் பெருமையை சுத்திகரிப்பதோடு, பொறுப்பேற்க வேண்டிய நிலையைத் தடுக்கின்றன.
எனவே, இந்தக் கவுன்சிலும் உறுப்பினர் நாடுகளும், தமிழர் வாழ்விடங்களில் முழுமையான இராணுவமயமற்ற நிர்வாகம் வேண்டும். இலங்கை முன்னாள் இராணுவத்தினரை ஆளுநர்கள், செயலாளர்கள், தூதர்கள் என நியமிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகள் மற்றும் உலகளாவிய நீதித்துறை வழக்குகளைத் தொடர வேண்டும். தமிழர் வாழ்விடங்களை இராணுவமயமற்றதாக மாற்றி, நிலங்களைச் சொந்தக்காரர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என எனஐநாவில் சிட்னியை சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சாரதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]()