பலதும் பத்தும்

பெரு முதல் ஆவுஸ்திரேலியா வரை: ஸ்காட்டிஷ் சகோதரர்களின் உலக சாதனை

ஸ்காட்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் பசிபிக் கடலை வேகமாக கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த எவான், ஜேமி மற்றும் லாச்லான் என்ற மூன்று சகோதரர்கள் பாதுகாப்பு துணையின்றி பசிபிக் கடலை வேகமாக படகில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சகோதரர்கள் கிட்டத்தட்ட 139 நாட்கள், 5 மணி நேரம், 52 நிமிடம் பெருவிலிருந்து அவுஸ்திரேலியா வரை 9000 மைல்களுக்கு மேல் படகு வலித்து இந்த நம்பமுடியாத சாதனையை செய்துள்ளனர்.

லிமா நகரில் ஏப்ரல் 12ம் திகதி பயணத்தை தொடங்கிய 3 சகோதர்களும் கடந்த சனிக்கிழமை கேர்ன்ஸ் வந்தடைந்துள்ளனர்.

இந்த பயணத்தின் போது கார்பன் பைபர் படகில் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சகோதரர்கள் இணைந்து ஒரு நாளைக்கு சுமார் 14 மணிநேரம் படகு வலித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button