முச்சந்தி

செம்மணி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற அகழ்வுப்பணிகளுக்கமைய 147 என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டதுடன், அவற்றில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, செம்மணி பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு மேலும் 8 வார காலம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *