தனியார் துறையில் தொழிலாளர்கள் பெரும் பற்றாக்குறை நான்கு லட்சம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இங்கு வேலை?

நாட்டில் தற்போது தனியார் துறையில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளதாகத் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தெரிவித்ததுடன் இதனால், திறன்மிக்க மற்றும் திறனற்ற தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு கைத்தொழில் துறையினர் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (30) கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், பல துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கட்டுமானம், ஓடுகள் மற்றும் உதிரிப்பாகங்கள் (tiles and accessories), காலணிகள், தோல் பொருட்கள் மற்றும் வாகன (automobile) உற்பத்தித் துறை உள்ளிட்ட பலதரப்பட்ட கைத்தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையிலும், புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை இந்த கைத்தொழில் துறைகளில் ஈடுபடுத்துவதற்கும், அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறையான பயிற்சித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துமாறு அமைச்சர் ஹந்துன்னெத்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
![]()