முச்சந்தி
யாழ்.பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாகப் பேராசிரியர் ஐங்கரன் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக இரசாயனவியற்துறைப் பேராசிரியர்.ஐங்கரன் நேற்று முன்தினம் சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்த பேராசிரியர் தி.வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுக் கடந்த மார்ச் மாதம் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றிருந்தார்.
இதன்பின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதிக்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில் அந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர். ஐங்கரன் உயர்பட்டப்படிப்புகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
![]()