பலதும் பத்தும்

சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில்   நடைபெற்றது. இதன்போது அமைச்சரவை முடிவுகளை அறிவித்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 ஆம் தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கின்றனர்.

தற்போது ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு அதிகமான இலங்கையின் இந்து பக்தர்கள் கலந்து கொள்கின்ற தலயாத்திரை மையமாகவும் அமைந்துள்ளது.

அதற்கமைய, சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வழிபாட்டு தரிசிப்பானது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என்று குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button