கவிதைகள்
அறியாமை சிரிக்கு தப்பா!… கவிதை… ஜெயராம்சர்மா

உலக முருண்டை யப்பா
உண்மை ஒழிந்தோடு தப்பா
கலகம் பிறக்கு தப்பா
கணக்கெல்லாம் தப்பு தப்பா
நிலவு வருகு தப்பா
நீளிருட்டும் நிறையு தப்பா
நிம்மதியும் விழி பிதுங்கு
ஒதுங்கியே கிடக்கு தப்பா
களவு பெருகு தப்பா
கண்ணியம் கலங்கு தப்பா
நிழல் கூடப் பயந்துமே
நீள்நிலத்தில் நிற்கு தப்பா
உறவு உடையு தப்பா
உள்ளமெலாம் சிதையு தப்பா
அறிவு ஒதுங்கு தப்பா
அறியாமை சிரிக்கு தப்பா !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()