கவிதைகள்

“அச்சமில்லை அச்சமில்லை” …. கவிதை…. ரவிச்சந்திரா

வெஞ்சினம் பூண்டெழுந்த அஞ்சாத் தமிழினம்
அடிமையாய், பேடியாய் அஞ்சி வாழ்வதோ?-இல்லை
நெஞ்சினில் விடுதலை நெருப்பேந்தி அஞ்சாது
தமிழ் ஈழ விடுதலைக்காய் போராடி வீழ்வதோ?

அடிமை விலங்கறுத்து எம் இறைமையை நாம் பெறும்வரை
எமக்கோர் சுதந்திர தாயகம் அமையும்வரை
அணையாது எரியட்டும் விடுதலை வேள்வியின் ஹோமத்-தீ
தணியாது ஒலிக்கட்டும் சுதந்திர யாகத்தின் மந்திர ஒலி

அஞ்சிவாழும் அலிகளுக்கும் பேடிகளுக்கும்
வாழ்வில் சாவு பலமுறை
அச்சமறியா வீரர் மாள்வதோ
வாழ்வில் ஒருமுறை-

தமிழ் ஈழ விடுதலைக்காய் துஞ்சிடல்
பெரும்பேறே-சிங்களத்தை
தொழுது பேடிகளாய் அஞ்சி
வாழ்ந்திடல் வெட்கக்கேடே

அறிவாய் தமிழா பாராண்ட பேராண்மைத் தமிழா
கரும்புலியாய் எழுந்து எரிமலையாய்க் குமுறு-
எரி நரகே நீ விளையாடும் பூமி
விடம் சூடி ஆடும் ருத்திர தாண்டவமே
உன்தன் ஓயாத விடுதலை வேள்வி

ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை
தம் ஆளுமுரிமை பெறும்வரை-நெஞ்சினில்
மூண்ட சுதந்திர நெருப்புத்தான் அணையுமோ?
உயிர் பூண்ட பெருந்தவமும்தான் கலையுமோ?

இன்பமே சூழ்க-எல்லோரும் நலமே வாழ்க
எல்லாப் புகழும் இறைவனுக்கே

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *