கவிதைகள்

காத்திருப்போம் காலம் மாறுமடி!… கவிதை…. சங்கர சுப்பிரமணியன்

சுட்டும் விழிச்சுடரே இப்போதிங்கே
சோதனைகள் பலவும் வந்து நிற்குதே
தட்டி அதை நொறுக்கிட எமக்கிங்கு
நல்ல வழி எதுவும் தோன்றவில்லையே

உயர்ந்தோம் உலக அரங்கிலென்றோம்
உயர்வு மக்கள் அழிவு எண்ணிக்கையிலா
உயர்த்திச் சொன்னால் பாவமும் இல்லை
கண்ணம்மா உண்மை அதிலும் இல்லை

மதங்களைக் காக்க பலவழிகண்ட மாந்தரே
மாந்தரை காக்க ஒரு மதியும் உதவலையோ
கங்கையில் குளித்தால் பாவம் போய்விடுமா
அங்கேயும் வந்து ஆட்டிப் படைக்கின்றதே

தீயை வலம்வந்தும் தீமை அகலவில்லையே
தீயொன்றும் காத்து அருளவில்லை மாறாய்
கொத்தாய் மக்களை கொளுத்தி மகிழுதே
தொற்றைவிட்டு தொழுதவரை தீண்டலாமா

வட்ட கரியவிழி வதைகளைப் பார்த்ததுவே
கிட்டவர அஞ்சி கிலிகொண்டு நின்றோரை
எட்ட இருந்து இப்போ நாம் பார்த்திடுவோம்
பட்டதெல்லாம் போதும் காத்திருப்போமடி!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *