முச்சந்தி

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ” நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில்,

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button