முச்சந்தி
மொசாட்டின் வேவு அழகி – கேத்ரின் பெரெஸ் ஷேக்ட்!… ஈரான் அரசுக்குள் ஊடுறுவிய உளவாளி !!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானை உள்ளிருந்து அதிர வைத்த மொசாட் முகவரான கேத்ரின் பெரெஸ் ஷேக்ட் (Kathrine Perez Sheked) பிறப்பால் பிரெஞ்சுக்காரர். இஸ்ரேலின் உயர்மட்ட உளவுத்துறை நிறுவனத்தால் நீண்ட பயிற்சி பெற்றவர். நவீன உளவு (Espionage) வரலாற்றில் மிகவும் துணிச்சலான பணிகளில் ஒன்றில் அவர் பணியமர்த்தப்பட்டார்.உயர்மட்ட ஈரானிய தொடர்பு:
உளவுத்துறை உலகில், ட்ரோன்கள், செயற்கைக் கோள்கள் மற்றும் சைபர் கருவிகள் உள்ளன. ஆனால் சில நேரங்களில், மிகவும் ஆபத்தான ஆயுதமாக கருதப்படும் ஒரு பெண் மத்திய கிழக்கு நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மொசாட் தனது “மிஷன் ஈரான்” (Mission Iran)ஐத் தொடங்கியது. அவரகளின் இலக்கு ஈரானின் இராணுவ உயரடுக்கு மற்றும் அணுசக்தி திட்டத்தில் ஊடுருவ வேண்டும். அதற்கு, அவர்களுக்கு ஒரு உளவாளியை விட அதிகமாக தேவைப்பட்டது, அழகிய வசீகரமான ஒருவர் தேவைப்பட்டார். அவரே கேத்ரின் ஆவார்.மொசாட்டின் தீவிர பயிற்சிக்குப் பிறகு, அவர் ஒரு போலி அடையாளத்தின் கீழ் ஈரானுக்குள் நுழைந்தார். ஷியா இஸ்லாத்தில் அமைதியைக் கற்கும் ஒரு ஆன்மீக பெண்ணாக மாற்றிக் கொண்டார். அவர் உள்ளூர் பழக்கவழக்கங்கள், மொழி மற்றும் மத சடங்குகளை ஏற்றுக்கொண்டார். அவரது மாறுவேடம் சரியானதாக ஈரானில் இருந்தது. ஒவ்வொருவரும் அறியாமல் கேத்ரினை தங்கள் வீடுகளுக்குள் அனுமதித்தனர்.
முதற்கட்டமாக உயர்மட்ட ஈரானிய இராணுவ அதிகாரிகளின் மனைவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். அவருடைய அன்பான குணமும் ஆர்வமும் அவர்களை வென்றது. தேநீர் விருந்துகள் , குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்து இடங்களிலும் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த அழைப்புகள் நட்புகளாக மாறியது. விரைவில், ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களின் வீடுகளுக்குள் அவருக்கு அணுக இலகுவான வாய்ப்புகள் கிடைத்தது. அங்கிருந்த வண்ணமே அவரின் உளவு நடவடிக்கைகள் தொடங்கின.
போர் அடித்தள வேவுப் பெண்:
உயர்மட்ட ஈரானிய இராணுவ அதிகாரிகளின் வீடுகளுக்குள் அவர் சென்ற போது யாரும்
அவரை சந்தேகிக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசிகளை ஸ்கேன் செய்வதிலும் மின்னஞ்சல்களைக் கண்காணிப்பதிலும் மும்முரமாக இருந்தபோது, கேத்ரின் புன்னகையுடன் எல்லா இடங்களிலும் நழுவிச் சென்றார்.
அவரை சந்தேகிக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசிகளை ஸ்கேன் செய்வதிலும் மின்னஞ்சல்களைக் கண்காணிப்பதிலும் மும்முரமாக இருந்தபோது, கேத்ரின் புன்னகையுடன் எல்லா இடங்களிலும் நழுவிச் சென்றார்.புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் தனிப்பட்ட இராணுவ விவரங்களை சேகரித்தார். அவள் எல்லாவற்றையும் நேரடியாக மொசாட்டுக்கு அனுப்பினார். அவர் தரவுகளை மட்டும் சேகரிக்கவில்லை. ஆனால் அவர் போருக்கான அடித்தள வேவுப் பணியை அமைத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 12, 2025 அன்று இரவு இராணுவ தளங்கள், ரகசிய பதுங்கு குழிகள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஈரான் முழுவதும் ஒரு திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆனால் இவை சீரற்ற தாக்குதல்கள் அல்ல. ஒவ்வொரு தாக்குதலும் துல்லியமானதுடன் இலக்குத் தவறாமல் தாக்கப்பட்டன.
இஸ்ரேல் குறிவைத்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் எட்டு உயர் இராணுவ ஜெனரல்கள், ஏழு மூத்த அணு விஞ்ஞானிகள், மூன்று உயர்மட்ட உளவுத்துறை தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த அதிரடியான தாக்குதல்களால் ஈரான் திகைத்துப் போனது. அவர்கள் எதிர்வினையாற்றும் முன், அவர்களின் உயர்மட்டத் தலைமை பலரும் கொல்லப்பட்டு விட்டனர். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியபோது, அவர்கள் இறுதியாக அவரை கண்டுபிடித்தனர்.
கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அல்ல, ஆனால் குடும்ப நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் மூலம் அவர் இனங் காணப்பட்டார். அந்த புகைப்படங்களில் கொல்லப்பட்ட ஈரானிய அதிகாரிகள் அருகே கேத்ரின் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஈரான் வரலாற்றில் அழிவுகரமான தாக்குதலுக்கு மூலகாரணமான
அவர் யார் என்பதை ஈரானியர்கள் உணரும் நேரத்தில் அவர் மறைந்துவிட்டார். தெஹ்ரான் முழுவதும் அவர் முகத்தின் சுவரொட்டிகள் பரவின.
ஒரு பரபரப்பான கதை போல இராணுவ வட்டாரங்களில் அவருடைய பெயர் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அவர் மீள தன் தாயகம் போய்விட்டார். மலைகள் வழியாக அவர் தப்பிச் சென்றதாக சிலர் கூறுகிறார்கள். மொசாட் அவரை ஆழமான பணியில் ஈடுபடுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
ஆனால் அவர் மீள தன் தாயகம் போய்விட்டார். மலைகள் வழியாக அவர் தப்பிச் சென்றதாக சிலர் கூறுகிறார்கள். மொசாட் அவரை ஆழமான பணியில் ஈடுபடுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்கள்.உண்மை எதுவாக இருந்தாலும் ஒன்று நிச்சயமாக சாதிக்கப்பட்டுள்ளது.
கேத்ரின் பெரெஸ் ஷேக்ட் வீர தீர உளவு விளையாட்டில் வெற்றி பெற்றவராக இருக்கிறார்.
தோட்டாக்கள் இல்லாமல், குண்டுகள் இல்லாமல், அழகு, மூளை மற்றும் துணிச்சல் மட்டுமே அவரின் வெற்றியை தீர்மானித்துள்ளது. அத்துடன் ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களை வெளியே வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஈரான் இதை “அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான மனித உளவுத்துறை மீறல்” என்று குறிப்பிடுகிறது. ஈரானுக்குள் நுழைந்து அதை உள்ளே இருந்து தகர்த்தெறிந்த பெண்ணை அது ஒருபோதும் மத்திய கிழக்கு மறக்காது.
![]()