பலதும் பத்தும்

TikTok-க்கு மீண்டும் 90 நாட்கள் அவகாசம்!

அமெரிக்காவில் TikTok செயலிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கடுமையாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

சீன நிறுவனமான ByteDance உடைய இந்தப் பிரபல செயலி, தேசிய பாதுகாப்பு சிக்கல்களைக் காரணமாகக் கொண்டு அமெரிக்காவில் தடைக்குட்படுத்தப்பட்டது

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக் டொக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து TikTok தற்காலிகமாக தனது சேவையை நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், TikTok-க்கு மூன்றாவது முறையாக 90 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் 17 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட TikTok செயலியின் எதிர்காலம் இன்னும் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button