உலகின் முன்னணி விஞ்ஞானிகள்; 7ஆவது முறை இடம்பிடித்த யாழ்.மண்ணின் மைந்தன் சாதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் சிவில் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கல்வியலாளரும், ஆராய்ச்சியாளருமான யாழ்.மண்ணைச் சேர்ந்த பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன் 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக இடம்பிடித்துச் சாதித்துள்ளார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் (Stanford University), எல்செவியர் (Elsevier) என்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் பதிப்பகமும் இணைந்து ஆண்டு தோறும் வெளியிடும் உலகின் மிகச் சிறந்த முன்னணி விஞ்ஞானிகளை அடையாளம் காணும் புகழ்பெற்ற சர்வதேசத் தர வரிசையான 2026 ஆம் ஆண்டுக்கான top-27 பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலிலேயே அவர் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான முதல் 27 பேர் பட்டியலில் மொத்தம் 68 விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறையைச் சேர்ந்த இவர் சிவில் மற்றும் கட்டுமானப் பொறியியல் (Building & Construction) பிரிவில் சர்வதேச அளவில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்வதுடன் 2026 ஆம் ஆண்டின் ஒற்றை ஆண்டுப் பட்டியலில் இலங்கையிலிருந்து தெரிவான ஆய்வாளர்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் ஒரே ஒரு ஆண்டுக்கான ஆய்வுகளின் தாக்கம் (Single-Year Impact 2026) மற்றும் நீண்டகால வாழ்நாள் சாதனை (Career-Long Impact 2026) ஆகிய இரு பிரிவுகளிலுமே இந்த வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()