முச்சந்தி

இரண்டாம் உலகப் போர் வெற்றி தினம்… மாஸ்கோவில் 29 நாட்டு தலைவர்கள் முன் இராணுவ அணிவகுப்பு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

மாஸ்கோவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நினைவு தின விழாவில் இருபத்தி ஒன்பது உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இந்த வெற்றி விழாவிற்கு முன்பாக இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகள் வென்றதன் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 28 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
மே 9 வெற்றி தின அணிவகுப்பில் 13 நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மாஸ்கோ வழியாக அணிவகுத்துச் சென்றார்கள்.
அஜர்பைஜான், பெலாரஸ், சீனா, எகிப்து, லாவோஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா, மியான்மர், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த துருப்புக்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
அதேவேளை ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பிரேசில், புர்கினா பாசோ, சீனா, காங்கோ, கியூபா, எகிப்து, எக்குவடோரியல் கினியா, எத்தியோப்பியா, கினியா-பிசாவ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாவோஸ், மங்கோலியா, மியான்மர், பாலஸ்தீனம், செர்பியா, ஸ்லோவாக்கியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசுலா, வியட்நாம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட இருபத்தி ஒன்பது வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாஸ்கோவில் வெற்றி தின அணிவகுப்பு:
சீனாவின் ஜி ஜின்பிங் உட்பட பல்வேறு இருபத்தி ஒன்பது உலகத் தலைவர்கள், மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி தின நினைவு தின விழாவில் கலந்து கொண்டார்.
மே 8-11 வரை நிகழ்வுகள் நடைபெற்ற பாரம்பரிய வருடாந்திர இராணுவ அணிவகுப்பு மே 9 அன்று ரஷ்ய தலைநகரின் மையத்தில் உள்ள செஞ் சதுக்கத்தில் நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போர் நினைவு நாளில் பல அமெரிக்க வீரர்கள் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது..
மே 9 இரண்டாம் உலகப் போரின் முடிவு:
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியாவின் பிரதிநிதிகளும், 31 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களும் இந்த அணிவகுப்பில்கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 9 அன்று, ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவைக் கொண்டாடும் வகையில் ரஷ்யா பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புகளை நடத்துகிறது. கடந்த ஆண்டு, ஒன்பது வெளிநாட்டுத் தலைவர்கள் மட்டுமே அணிவகுப்பில் புடினுடன் இணைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button