முச்சந்தி

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு அறிவிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (07) முழுமையாக வெளியிடப்பட்டன. முடிவுகளின் பிரகாரம் பல உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியைப் பிடிப்பதில் வெற்றி பெற்றது. என்றாலும் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களில் எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தன. இதனால் ஆட்சி அமைப்பதில் சில நெருக்கடிகளை ஆளும் கட்சி எதிர்கொள்ளும் சூழல் காணப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் பல சுயேச்சைக் குழுக்கள் பிற உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

இதற்கிடையில், பிரதேச மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்த சில நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து, எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button